ஏறிக்கொண்டே வந்த தங்கம், வெள்ளி விலையில் இன்று அதிரடி சரிவு! காரணம் இது தான்..!

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தங்கத்தின் விலை ரூ. 25,000 ஐ தாண்டியது.


அதன் பிறகு தங்கவிலையில் ஏற்றமே ஏற்பட்டது. ஆகஸ்ட் மாத முடிவில் ரூ.31,000 ஐ எட்டியது. செப்டம்பர் முதல் தங்கத்தின் விலையில் சிறிது ஏற்ற இறக்கம் இருந்து வந்தது. இந்த நிலை டிசம்பர் மாதம் 20 தேதி வரை நீடித்தது. டிசம்பர் மாத இறுதியில் தங்கத்தின் விலை ரூ. 31,000 ஐ தாண்டியது.

இந்த வருட தொடக்கம் முதல் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே உள்ளது. இந்த வருடம் 2ஆம் தேதி ரூ. 31,384 ஆக இருந்த தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ. 656/- அதிகரித்து 3ஆம் தேதி ரூ. 32,040 ஆக உயர்ந்தது. அதன்பிறகும் தினமும் தங்கவிலை ஏறிக்கொண்டே வருகிறது.

இந்நிலையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 4,088 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 32,704 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.3,896 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 31,168 ஆகவும் இருந்தது.

இன்று சவரனுக்கு ரூ. 424 குறைந்து 22 கேரட் தங்கத்தின் விலையானது ஒரு கிராமுக்கு ரூ. 3,843 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.30,744 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.. அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலையானது ஒரு கிராம் ரூ.4,035 ஆகவும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 32,280 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு:

7.1.2020 - 1 grm – Rs. 4,035/-, 8 grm – 32,280/- ( 24 கேரட்)

7.1.2020 – 1 grm – Rs. 3,843/-, 8 grm – 30,744/- (22 கேரட்)

வெள்ளி விலை நேற்றைய நிலவரப்படி கிலோவுக்கு ரூ.52,200 ஆக இருந்தது. ஆனால் இன்று மிகப்பெரிய அளவில் கிலோவுக்கு ரூ. 1200 குறைந்துள்ளது. இதன்படி, வெள்ளி விலை இன்று கிராமுக்கு 51.00 ஆகவும் கிலோ ரூ.51,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..