பிக்பாஸில் நடந்தது என்ன? விரைவில் நேரடி ஒளிபரப்பு! வனிதா வெளியிட்ட அதிரடி சரரெடி அறிவிப்பு!

லைவ் ஷோவில் வருவதாக நடிகை வனிதா பதிவு செய்த ட்வீட்டானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


பிக்பாஸ் வீட்டில் தன் மனதுக்கு தோன்றியவற்றை மூடி மறைக்காமல் அப்படியே வெளிப்படையாக பேசியவர் நடிகை வனிதா. அதனால் பலருடனும் சண்டை போடும் சூழல் வந்தாலும் தன்னுடைய வழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை. இந்நிலையில் பிக்பாஸுக்கே பெரும் சவாலாக அந்த வீட்டிற்குள் இருந்தவர் வனிதா.

இதனிடையே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு அவர் முதன்முதலில் போட்டுள்ள ட்வீட்டானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அதாவது, "வணக்கம் ட்விட்டர் வாசிகளே. பிக்பாஸில் இருந்ததால் என்னுடைய படப்பிடிப்பு வேலைகளில் சற்று பின் தங்கியுள்ளேன். நிறைய பகிர்வதற்கு உள்ளது, கண்டிப்பாக பகிர்வேன், கூடிய விரைவில் லைவ் ஷோ நடத்துவது குறித்து திட்டமிட்டு வருகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவானது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மட்டும் அவ்வாறு செய்தால் நிச்சயம் பலரின் உண்மையான முகமுடியை வெளிக்கொண்டு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.