குரூப் 4 தேர்வில் ஆடு மேய்ப்பவர் மாநிலத்திலேயே முதலிடம்! 45 வயதில் சாதித்தது எப்படி? அம்பலமான உண்மை!

குரூப்-4 தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார் ஆடு மேய்ப்பவரை  விசாரணைக்கு ஆஜராகுமாறு டி.என்.பி.எஸ்.சி அறிவுறுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குரூப்-4 தேர்வானது செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதியில் நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் நவம்பர் மாதத்தில் வெளியாகின. ராமநாதபுரத்தில் உள்ள கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் கிட்டத்தட்ட 3,214 தேர்ச்சி பெற்றனர். இந்த இரு தேர்வு மையங்களில் அதிகளவில் தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சி பெற்றது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. முதல் 100 இடங்களில் கிட்டத்தட்ட 35 இடங்களை இந்த இரு தேர்வு மையங்களில் எழுதியோர் பிடித்தனர்.

இதனால் டிஎன்பிஎஸ்சி இதுகுறித்து விசாரணை நடத்த முடிவு செய்தது. 288.5 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த திருவராஜு என்பவர் பெற்றார். இதனிடையே இவர் ராமேஸ்வரத்தில் தேர்வு எழுதியது தெரியவந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் எழுதாமல் ராமேஸ்வரத்தில் எழுதியதால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

உடனடியாக 13-ஆம் தேதியன்று நேரில் ஆஜராகுமாறு டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து திருவராஜூ கூறுகையில், "நான் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவன். பி.எஸ்.சி கணிதம் பட்டம் பெற்றவன். இதுவரை 7 முறை குரூப்-4 தேர்வு எழுதியுள்ளேன். தொடர்ந்து தோல்வியை அடைந்தேன்.

எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் படித்து வந்தேன். தற்போது முதல் இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளேன். என்னிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. விசாரணையில் ஆஜராகி என்னுடைய விளக்கத்தை கொடுப்பேன்" என்று கூறினார்.

இந்த விவகாரமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.