வீட்டுக்கு வா..! அழைத்த காதலன்..! நம்பிச் சென்ற காதலிக்கு அங்கு ஏற்பட்ட பயங்கரம்! பதைபதைக்க வைத்த சம்பவம்!

காதலனின் வீட்டிற்கு சென்ற இளம்பெண் அடித்து துன்புறுத்தப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவமானது சத்தீஸ்கர் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர் என்னும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் 20 வயது இளம்பெண் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக மருத்துவர்கள் இது குறித்து அப்பகுதி காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.

காவல்துறையினர் விரைந்து சென்று அரசு மருத்துவமனையில் விசாரித்தனர். அப்போது அந்தப் பெண்ணின் சகோதரர் பல திடுக்கிடும் உண்மைகளை கூறி புகார் அளித்துள்ளார். 

அந்த இளம்பெண்ணை அவருடைய காதலர் 18-ஆம் தேதியன்று வீட்டிற்கு வரும்படி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி அந்தப் பெண்ணும் காதலனின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவருடைய காதலன் இல்லை. காதலனின் பெற்றோர் மற்றும் சகோதரி மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். 

அவர்கள் இந்தப் பெண்ணை வீட்டிற்குள் அழைத்து சென்றனர்.  திடீரென்று 3 பேரு அந்த இளம்பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளனர். மூன்று பேரும் பாதிக்கப்பட்ட பெண்ணை மிகவும் கொடூரமான முறையில் கொடுமைபடுத்தியுள்ளனர். அதன் பின்னர் பெண்ணின் உடல் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளனர். 

சனிக்கிழமை அன்று அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், இந்த விவகாரமானது வெளியே தெரிந்துள்ளது. உடனடியாக காவல்துறையினர் இந்த கொடூர செயலுக்கு காரணமான காதலனின் பெற்றோர் மற்றும் சகோதரியை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவமானது சத்தீஸ்கர் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.