கள்ளக்காதலனை போட்டுத் தள்ளிய சகோதரன்! அதிர்ச்சியில் தீக்குளித்த சகோதரி! கள்ளக் காதலுக்கு மரியாதை!

காதலித்த பாவத்திற்காக புகைப்படக்காரர் ஒருவர் கொன்று எரிக்கப்பட்ட செய்தியைக் கேட்ட காதலி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர் காமராஜர் தெரு அமைந்துள்ளது. இங்கு ரெசி என்பவர் வசித்து வருகிறார். இவர் புகைப்படக்காரர் ஆவார். இவருடைய வயது 33. இவர் தன் குடும்பத்தினருடன் சமூரெங்கபுரம் இலங்கை அகதிகள் வசித்து வந்தார். தன் குடும்பத்தினருடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் அவர்களைப் பிரிந்து காமராஜர் தெருவிற்கு இடம்பெயர்ந்தார்.

இந்நிலையில் ரெசியின் நண்பரான கேத்தீஸ்வரன் என்பவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள்புரத்தில் வசித்து வருகிறார். இவரும் புகைப்படக்காரர் ஆவார். இருவரும் புகைப்படக்காரர்கள் என்பதால் நெருக்கம் ஏற்பட்டு கேத்தீஸ்வரன் வீட்டிற்கு ரெசி அடிக்கடி செல்லும் வழக்கத்தை கொண்டிருந்தார். அவ்வாறு செல்கின்றபோது கேத்தீஸ்வரனின் அக்காளுக்கும், ரெசிக்கும் நெருக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது.

நாளடைவில் இதனை தெரிந்துகொண்ட கேத்தீஸ்வரன் ரெசியை கண்டித்துள்ளார். ஆனால் அதை கண்டுகொள்ளாமல் ரெசி கேத்தீஸ்வரனின் அக்காளை தொடர்ந்து காதலித்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த கேத்தீஸ்வரன், தன் நண்பர்களான சுசீந்திரன், முகமது யூசப் ஆகியோரின் உதவியுடன் ரெசியை கொன்று உடலை கரியமாணிக்க புறத்திலுள்ள சுடுகாட்டில் எரித்துள்ளனர். 

இது தொடர்பாக கண்ணியாகுமரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்துள்ளனர். 

இந்நிலையில் ரெசி கொல்லப்பட்ட செய்தி கேத்தீஸ்வரனின் அக்காளான அனுஷாவுக்கு தெரியவந்தது. மிகவும் சோகமான நிலையில் இருந்த இவர், யாரும் எதிர்பாராத வகையில் நேற்றிரவு 8 மணியளவில் தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு அனுஷா தீக்குளித்தார்.

பெரும் சிரமத்திற்கு பிறகு அனுஷாவை மீட்டெடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உடலில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர் பிழைப்பது கடினமென்றும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது பெருமாள்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுஷாவின் தற்கொலையை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.