கொடூர தாக்குதல்! உயிருக்கு போராட்டம்! ஒரே வாரத்தில் இந்திய சிறுமிக்கு குவிந்த 4 கோடி ரூபாய்!

உலகின் மிகப்பெரிய கொடூரமாக இனவெறி தாக்குதல்கள் கருதப்படுகின்றன.அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் அவ்வப்போது இனவெறி நடந்து வருகின்றன.


சமீபத்தில் அமெரிக்காவில் பயங்கரமான இனவெறி தாக்குதல்கள் நடைப்பெற்றன. இந்த தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த சின்னஞ்சிறு சிறுமி ஒருவர் குடும்பத்துடன் காரால் மோதப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த சிறுமி கோமா நிலைக்கு சென்றுள்ளது உலகத்தில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சதியில் 13 வயதேயான திரித்தி என்ற சிறுமிக்கு தலையில் பலத்த அடிப்பட்டு கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

இந்த சிறுமியின் குடும்பத்தினர்  கலிபோர்னியா மாகாணத்தில் சாலையை கடக்க முயன்ற போது அதிவேகத்தில் வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியது. விசாரணை நடத்தியதில் இந்த குடும்பத்தினர் இஸ்லாமிய குடும்பம் என்று கருதி வெறுப்புடன் வேண்டுமென்றே காரை ஏற்றினர் என்பது தெரியவந்தது.

தற்போது உயிருக்கு போராடி வரும் சிறுமிக்கு Go fund me என்ற இணையதளத்தில் சிகிச்சைகாக நிதி திரட்டும் பணியை மேற்கொண்டனர். ஏழே நாட்களில் 4 கோடியே 16 லட்சம் நிதி திரட்டப்பட்டுள்ளது. உலகில் மனிதாபிமானம் உள்ளதா என்ற கேள்விக்கு இதுபோன்ற நிகழ்வுகள் பாஸிட்டிவான வகையில் பதலளிக்கின்றன.