வயதுக்கு வந்த மகள்! மறுநாள் தந்தை அரங்கேற்றிய கொடூரம்! மணப்பாறை பயங்காரம்!

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு சீறும் வேகத்தில் குறைந்து வருவது மனிதநேயம் உள்ளவர்களுக்கு பெரும் மனக்கவலையை உண்டாக்கியுள்ளது.


 சில வீட்டில் பெற்றோர்களே தாங்கள் பெற்ற பிள்ளைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதென்பது சமூகம் சீரழிந்து போவதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. மணப்பாறை அருகே பெற்ற மகளை  பலாத்காரம்  செய்த தந்தை மீது மாணவி புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணப்பாறை பகுதி முறுக்கு விற்பனைக்கு சிறப்பு பெற்ற இடம். இதற்கு அருகே உள்ள புதுமணியாரம்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் என்பவர். இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு லட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் குழந்தை பிறந்தது. அவள் 9-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பு செல்ல உள்ளார்.

ரவிச்சந்திரனுக்கு தினமும் மது அருந்தும் பழக்கம் உண்டு.  லட்சுமி வயதுக்கு வந்த மறு நாள் மது அருந்திக்கொண்டிருந்த போது, போதை தலைக்கேறி தன் மகள் என தெரிந்தும் அவரை ஈவிரக்கமின்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர், தப்பிச்சென்ற லட்சுமி மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை பற்றி புகார் செய்துள்ளார்.வழக்குப்பதிவு செய்து காமன் கொடூரன் ரவிச்சந்திரனை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.