காதல் தோல்வி! இளம்பெண் எடுத்த விபரீத முடிவு! அதிர்ச்சியில் காதலன்!

முற்காலத்தில் இருந்த காதலின் வலிமை தற்போது இல்லை என்பது மிகுந்த வேதனையையும், மன உறுத்தலையும் தருகிறது. காதலர்களுக்குள் ஏற்படும் சிறுசிறு மனக்கசப்பினால் அவர்கள் பிரிந்து செல்வது வழக்கமாகி வருகிறது.


இந்நிலையில் தன்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றியவரின் வீட்டு வாசலில் தர்ணா செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாசலம் நகராட்சி கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கு ஒரு அரசு கல்லூரியில் பயிலும் மாணவிக்கும், அதே கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரியும் கோவிந்தராஜன் என்பவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இவர்கள் இரண்டாண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் அந்த மாணவி ஒரு விபத்தில் சிக்கினார். விபத்தின் காரணமாய் அவர் சுயநினைவை இழந்தார். இதனால் கோவிந்தராஜன் இவரை விட்டு விலகி சென்றதாக கூறப்படுகிறது.

சில மாதங்கள் கழித்து அந்த மாணவிக்கு மீண்டும் சுயநினைவு வந்துள்ளது. கோவிந்தராஜனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். இதற்கு கோவிந்தராஜன் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை கண்டிக்கும் வகையில் அந்த மாணவி கோவிந்தராஜனின் வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் கோவிந்தராஜன் ஒப்புக்கொள்ளும் வரை தர்ணா செய்வதாக கூறியுள்ளார்.