சென்னை உயர் நீதிமன்றத்தில் பேய்கள் உலவிய கதை தெரியுமா? கொய்யாத்தோப்பு ரகசியங்கள் இதோ!

சென்னையில் இருக்கும் செய்ண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது 1644ல்.அதன் அதிகாரப்பூர்வ முதல் தலைவர் ஆரோன் பேக்கர்.1652ல் ஆரோன் பேக்கர் சென்னைக்கு கப்பலில் வரும்போது கூடவே கற்பினி மனைவியான எலிசபெத்தையும் அழைத்து வந்தார்.


ஆனால் சென்னையை நெருங்கும் முன்பே பிரசவத்தின் போது எலிச்பெத் இறந்துவிட்டார்.பண்டைய வழக்கப்படி சவப்பெட்டியில் வைத்து கடலில் இறக்கிவிடலாம் என்று சொல்லப்பட்ட யோசனையை ஆரோன் ஏற்கவில்லை.

மனைவியின் பினத்தை அன்றைய சென்னைக்கு கொண்டுவந்து கோவா கார்டன் என்று அழைக்கப்பட்ட ஒரு கொய்யாத் தோப்பில் அடக்கம் செய்தார்.அதன் பிறகு அந்தக் கொய்யாத்தோப்பு அன்றைய மெட்றாஸ் வாழ் ஆங்கிலேயரின் இடுகாடாக மாறிவிட்டது.இது கிட்டத்தட்ட நூறாண்டு காலம்,அதாவது 1746 செப்டம்பர் முதல் வாரம் வரை நூற்றுக்கணக்கான கல்லரைகளுடன் காட்சி தந்தது.எல்லாம் நிக்கோலஸ் போர்த்தானோ என்கிற ஃபிரஞ்சு தளபதி சென்னை மீது போர் தொடுக்கும் வரைதான்.

பிரஞ்சுப் படைகள் சென்னைக்குள் நுழந்து இடுகாடாக இருந்த கோவா கார்டனருகில் முகாமிட்டது.அங்கிருந்து கோட்டை மீது பீரங்கித் தாக்குதல் நடத்த தீர்மானித பிரஞ்சு தளபதி அந்த கோவா கார்டனில் இருந்த கல்லரைக் கற்களை எல்லாம் பெயர்த்து அடுக்கி அவற்றின் மேல் பீரங்கிகளை நிறுத்தி செய்ண்ட் ஜார்ஜ் கோட்டையைத் தாக்க உத்தரவிட்டான்.,செப்டம்பர் 21ம் தேதி கோட்டையை பிரஞ்சு படைகள் கைப்பற்றின.

தப்பியோடிய பிரிட்டிஷ்க்காரர்கள் கடலூர் அருகில் உள்ள ஃபோர்ட் டேவிட்டில் போய் ஒளிந்து கொண்டனர்.அதே சமையத்தில் அமெரிக்காவிலும் ஃபிரான்சும் இங்கிலாந்தும் சண்டையிட்டுக் கொண்டு இருந்தன.அங்கே சமாதன உடன்படிக்கை ஏற்பட்ட போது இங்கேயும் சமாதானமாகி பிரஞ்சு படைகள் பாண்டிச்சேரி திரும்பிவிட மீண்டும் சென்னை திரும்பிய பிரிட்டீஷார் சென்னையை செப்பனிடத் தொடங்கினர்.

அவர்களது இடுகாடான கோவா கார்டனில் உடைந்து கிடைந்த கல்லரை கற்கள் அனைத்தையும் கொண்டு வந்தி புனித மேரி சர்ச்சின் மேற்கு வாயில் பகுதியில் பதித்து வைத்து விட்டனர்.இவற்றை இப்போதும் காணலாம்.

அந்த கற்களுக்கு கீழே உடல்கள் ஏதும் பாதிக்கப்படவில்லை. புதைக்கப் பட்ட உடல்கள் அந்த கோவா கார்டனிலேயே தங்கிவிட்டன.இதற்குப் பிறகு ஆங்கிலேய இன்று சென்னை செண்ட்டிரல் ஸ்டேஷன் எதிரில் கூவம் கரையில் இருக்கும் கல்லறைத் தோட்டத்தைப் பயன்படுத்த துவங்கி விட்டதால் பழைய கோவா கார்டன் என்கிற கொய்யாத்தோப்பு பக்தர்கள் மண்டி சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்திருக்கிறது.அந்த இடத்தில்தான் இன்றைய சென்னை உயர்நீதிமன்றம் கட்டப்பட்டது.

1892ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி திறக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் அடியில் அரோன் பெக்கரின் மனைவி உட்பட நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கபட்டு இருந்ததால் நூறாண்டுகள் கடந்து ,ஆயிரத்து தொள்ளாயிரத்து என்பதுகள் வரை சென்னை உயர் நீதிமன்றத்துக்குள் பல வெள்ளைகார துரைகள் பேயாக உலவிய கதைகள் உண்டு.இதற்கு ஆதாரமாக ,அன்று பிரஞ்சுக்காரர்கள் கைகளில் இருந்து தப்பிய ஹைமர்ஸ் ஓப்லிக்ஸ் என்கிற ஒரு கல்லறை சென்னைக் சட்டக்கல்லூரி வளாகத்தில் இப்போதும் நிற்கிறது.

பேய்க்கதைகளோடு,சென்னை உயர்நீதி மன்றம் கட்டப்பட்ட போது நீதிமன்ற வளாகத்தின் அழகைப்புகழ்ந்து 'ஐகோர்ட்டின் அலங்காரச் சிந்து' என்கிற சிறு கவிதை நூலும் உலவி இருக்கிறது. அந்தக்காலத்தி குஜிலி இலக்கியம்,அல்லது முச்சந்தி இலக்கியம் என்றழைக்கபட்ட இந்த வகைப் பாடல்கள் முக்கிய சம்பவங்கள் நாட்டில் நடக்கும்போது எழுதி வெளியிடப்பட்டு இருக்கின்றன.

அந்த வகையில் இந்த ஐகோர்ட்டின் அலங்கார சிந்தை எழுதியவர்  , செஞ்சியைச் சேர்ந்த ஏகாம்பர முதலியார்.சென்னை பூமகள் விலாச அச்சுக்கூடத்தில் 1908ம் ஆண்டு அச்சிடப்பட்டு இருக்கிறது.