ஸ்பெயின் பொதுத் தேர்தல் டிவி விவாதத்தின்போது, ஸ்டூடியோவை பெண்கள் 2 பேர் சுத்தம் செய்யும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
டிவியில் அனல் பறந்த அரசியல் விவாதம்! ஸ்டூடியோவுக்குள் திடீரென நுழைந்த துப்புரவு பெண்! பிறகு நடந்த சுவாரஸ்யம்!

பெண்ணியம் என்பது தற்போது ஸ்பெயின் நாட்டின் மிகப்பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், அங்கு பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இதன் ஒருபகுதியாக, RTVE என்ற டிவி சார்பாக, தேர்தல் தொடர்பான விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக, ஆண் பேச்சாளர்கள் நிறைய பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.
மேலும் 2 பெண் பேச்சாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் நிகழ்ச்சிக்கு தயாராக நின்றபோது, 2 பெண்கள் எதுவும் நடக்காதது போல, சாதாரணமாக, ஸ்டூடியேவை சுத்தம் செய்தார். இதுபற்றிய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஸ்பெயினில் பெண்களுக்கு எந்தளவுக்கு சம உரிமை மறுக்கப்படுகிறது என்பதற்கு இந்த புகைப்படம் உதாரணமாக உள்ள அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்ய தொடங்கியுள்ளன. #ELDEBATEenRTVE #TheDebate உள்ளிட்ட கீவேர்ட்களில் இந்த விவகாரம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.