சென்னையில் சமையல் எரிவாயுவின் விலை ஒரு சிலிண்டருக்கு 192 ரூபாய் விலை குறைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒரு சிலிண்டருக்கு ரூ.200 விலை குறைத்த மோடி..! ஊரடங்கால் முடங்கிய மக்களுக்கு இன்ப அதிர்ச்சி!

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவும் மே 3 வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் எரிசக்தி சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால் கடந்த இரண்டு மாதங்களாகவே சமையல் எரிவாயுவின் விலை குறைந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் சமையல் எரிவாயுவின் விலை மாற்றி அமைக்கப்படுவது வழக்கத்தில் உள்ளது.
அந்த வகையில் மே மாதத்தின் முதல் நாளான இன்று சமையல் எரிவாயுவின் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சிலிண்டர் 192 ரூபாய் விலை குறைந்து ரூபாய் 569.50 ஆக உள்ளது. டெல்லியில் ஒரு சிலிண்டர் 162.50 ரூபாய் விலை குறைந்து 581.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் 190 ரூபாய் விலை குறைந்து 584.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேச சந்தை நிலவரம் ஆகியவற்றை வைத்துதான் இந்தியாவில் சமையல் எரிவாயு விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமையல் எரிவாயுவின் இந்த விலை குறைப்பு ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி உள்ள மக்களுக்கு சற்று மகிழ்ச்சியை கொடுத்துள்ளது .