படுக்கைக்கு மட்டும் தான் ஆண்கள்! காதல் கல்யாணம் எல்லாம் கிடையாது! நடிகை ஓபன் டால்க்!

'நான் எதிர்பார்த்த ஆண் துணை கிடைத்துவிட்டார்,'' என்று கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.


பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத், சவாலான வேடங்களில் நடித்து, ரசிகர்களை ஈர்த்துள்ள முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர், ஹிருத்திக் ரோஷன் உடன் இணைந்து, கைட்ஸ், க்ரிஸ் 3 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதன்மூலமாக, ஹிருத்திக்குடன் நெருங்கி பழகிவந்த கங்கனா பின்னர், அவரை விட்டு விலகினார்.

ஹிருத்திக் பற்றி சராமரி குற்றச்சாட்டுகளை முன்வைத்த கங்கனா, ஒருகட்டத்தில் திருமணம் செய்யவே விருப்பம் இல்லை என்றும் கூறிவந்தார். திருமண வயதை கடந்த நிலையிலும் அதுபற்றி அவர் அக்கறை காட்டாமல் இருந்தார். இந்நிலையில், ஊடக சந்திப்பு ஒன்றில் பேசிய கங்கனா, ''எனக்கு இனிமேல் டேட்டிங் சென்று காதலை வளர்க்க பொறுமை கிடையாது.

அதில் எனக்கு துளியும் விருப்பம் இல்லை. வாழ்க்கையை பகிர்ந்துகொள்ள ஒரு நல்ல பார்ட்னர் கிடைத்தால் போதும். அத்தகைய நபர் தற்போது கிடைத்துள்ளார். அவருடன் நிம்மதியாக வாழ ஆசைப்படுகிறேன்,'' என்று கூறியுள்ளார். 

எனினும், தனது ஆண் நண்பர் யார் என்ற விவரத்தை, கங்கனா ரனாவத் வெளியிட மறுத்துவிட்டார். ஏற்கனவே மூன்று ஆண் நண்பர்கள் இருந்த நிலையில் அவர்களை கழட்டிவிட்டவர் கங்கனா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏற்கனவே திருமணம் செய்யப்போவதில்லை என்று கங்கனா கூறியிருந்தார்.

இந்த நிலையில் டேட்டிங்கும் இல்லை காதலும் இல்லை என்று கூறிய கங்கனா வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள மட்டும் ஆண் நண்பர் என்று கூறியிருப்பது ஒன்லி படுக்கை அறை மேட்டருக்கு மட்டும் தான் என்று கிசுகிசுக்கப்படுகிறது.