அத்தையுடன் உறவில் இருந்தேன்! பிறகு சித்தியை தகாத உறவுக்கு ஆளாக்கினேன்..! இது அத்தைக்கு பிடிக்கவில்லை! அதிர வைத்த வாக்குமூலம்!

முதலில் அத்தையுடன் உறவில் இருந்து வந்த நான் பின்னர் சித்தியுடன் தகாத உறவில் இருக்க ஆரம்பித்தேன். இதுகுறித்து சண்டையிட்ட அத்தையை நானே கத்தியால் குத்தி கொலை செய்தேன் என்று கணேசன் பரபரப்பு வாக்குமூலத்தில் போலீசாரிடம் கூறி இருக்கிறார்.


சென்னையை அடுத்து புழல் விநாயகபுரம் பகுதியில் பரிமலம் நகர் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு சரவணன் என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி பெயர் குணசுந்தரி (வயது 37). குணசுந்தரிக்கு ஒரு அண்ணனும் ஒரு தம்பியும் உள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் குணசுந்தரியின் தம்பி லோகு உயிரிழந்தார். குணசுந்தரியின் அண்ணனுக்கு கணேசன் (வயது 26) என்ற மகன் இருக்கிறார். 

கணேசனின் மனைவி பெயர் அருள்செல்வி. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கணேசன் கொளத்தூரில் உள்ள பாலாஜி நகர் பகுதியில் வசித்து வருகிறார். மனைவியும் தன்னை விட்டு பிரிந்ததால் கணேசன் தன்னுடைய வீட்டில் தனியாக இருந்து வந்திருக்கிறார். கணேசன் வசித்து வரும் அதே பகுதியில் தான் குணசுந்தரியின் தம்பி லோகுவின் மனைவி வசித்து வந்திருக்கிறார். 

இதனை அடுத்து கணேசன், தன்னுடைய சொந்த சித்தியான லோகுவின் மனைவியுடன் தவறான தொடர்பில் இருந்து வந்திருக்கிறார். இருவருக்குள் இருந்த கள்ளக்காதல் கதை குணசுந்தரி தெரியவந்துள்ளது. இதனை அறிந்த குணசுந்தரி உடனடியாக கணேசனை எச்சரித்திருக்கிறார். மேலும் இந்த பழக்கத்தை கைவிடும்படி வற்புறுத்தியிருக்கிறார். சொந்த சித்தியுடன் கள்ளக்காதல் வைத்திருக்கிறாயே என குணசுந்தரி மிகவும் கோபப்பட்டு கணேசனை திட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கணேசன் தன்னுடைய அத்தையை வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை வைத்து சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். 

தப்பி ஓடிய கணேசன் வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு கொண்டமல்லி கிராமத்தில்  தலைமறைவாக இருந்துள்ளார். போலீசார் கணேசனே பதுங்கி இருந்த இடத்திலிருந்து கைது செய்து சென்னையில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அதன் பின்னர் கணேசனிடம் இந்த கொலை வழக்கு குறித்து விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது கணேசன் கூறிய தகவல்கள் பொலிசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதாவது முதலில் நானும் என்னுடைய அத்தை குணசுந்தரியும் தான் நெருங்கி பழகி வந்தோம். பின்னர் என் அத்தை குணசுந்தரி திருமணம் செய்துகொண்டார். அவருக்கு திருமணம் ஆன பின்பு நான் அவரை விட்டு ஒதுங்கி இருந்தேன். நாங்கள் இருவரும் நெருங்கிப் பழகிய பொழுது பலமுறை என் அத்தை குணசுந்தரி எனக்கு நிறைய பணம் உதவி செய்திருக்கிறார். இந்நிலையில் என் சித்தப்பா இறந்துவிடவே என் சித்தியும் நானும் நெருங்கி பழக ஆரம்பித்தோம். பின்னர் என் சித்தியும் நானும் சேர்ந்து தனியாக வீடு எடுத்து தங்கினோம். 

இதுகுறித்து தகவல் தெரிந்ததால் என் அத்தை என்னிடம் சண்டையிடுவதற்காக சம்பவ தினத்தன்று நேரில் என் வீட்டிற்கு வந்தார். அப்பொழுது நாங்கள் இருவரும் நெருங்கி பழகிய போது நான் பெற்ற பணத்தை திருப்பித் தருமாறு என் அத்தை குணசுந்தரி தொல்லை செய்தார். அவருக்கு குறிப்பாக நானும் என் சித்தியும் நெருக்கமாக பழகுவது சுத்தமாக பிடிக்கவில்லை. ஆகையால் அதை கைவிடுமாறு என்னை வற்புறுத்தினார். இதனால் எங்கள் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது. ஆத்திரம் தாங்க முடியாத நான் சமையல் அறையில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை கொண்டு வந்து என் அத்தையை சரமாரியாக குத்தி கொலை செய்தேன் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இதையடுத்து போலீசார் கணேசன் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.