அடிக்கடி உடல் உறவு..! நீண்ட ஆயுள், நோய் எதிர்ப்பு சக்தி! ஆண்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

அடிக்கடி உடலுறவு கொள்வதால் பாதிப்புகள் இல்லையென்றும் மாறாக உடலுக்கு பல நன்மைகள் கிடைப்பதாகவும் மகிழ்ச்சிகரமான ஆய்வு முடிவை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


உடலுறவு என்பது இன்பம் மட்டும் இல்லை. உடல் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகள் உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முக்கியமாக மனஅழுத்தம் குறையும் என்று தெரிவிக்கின்றனர். சமீபத்தில் வாரத்தில் 3 முறை உடலுறவு கொள்ளும் இளைஞனை பரிசோதித்த பென்சில்வேனியா வில்கிஸ் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் அவனுடைய உடலில் வைரஸ்களை எதிர்த்துப் போராடும் ஆன்டிபயாடிக் அளவு அதிகரித்துள்ளதை கண்டுடிபிடித்துள்ளனர். 

இதேபோல் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கார்டியாலஜி நடத்திய ஆய்வில் மாதத்திற்கு ஒரு முறை அல்லது அதற்கும் குறைவாக பாலியல் உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு இதய நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உடலுறவு கொள்வதால் கலோரிகள் எரிக்கப்படுகிறது. எனவே உங்கள் கலோரிகளை எரிக்க நினைத்தால், உடலுறவில் அடிக்கடி ஈடுபடுங்கள். உச்சக்கட்ட இன்பத்தை அடைந்த பின் பெண்களை விட ஆண்கள் தான் நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறுகிறார்கள். எனவே உறக்கமின்றி அவஸ்தைப்பட்டால் துணையுடன் உடலுறவில் ஈடுபடுங்கள்.  

இதேபோல் உடலுறவு என்பது உடற்பயிற்சி போன்றது என தெரிவித்திருக்கும் ஸ்காட்லாந்து பல்கலைகழக ஆய்வாளர்கள் மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்கும் என கூறுகின்றனர். வாரம் ஒருமுறை உடலுறவில் ஈடுபட்டால் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடலாம் எனவும் கூறுகின்றனர். இரத்த அழுத்தத்தைக் குறைக்க அடிக்கடி துணையுடன் உடலுறவில் ஈடுபடுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.