இலவச அவுட் கோயிங் ரத்து! ஆனால் 1ஜிபி டேட்டா இலவசம்! சரி எவ்வளவுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்?

ஜியோ விற்கு எவ்வளவு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யவேண்டும் அதுபற்றிய விவரம்


➤10 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால் 124 IUC நிமிடங்கள் மற்ற தொலைதொடர்பு சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளரிடம் பேசிக்கொள்ளலாம். இதற்கு இணையாக 1 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும்.

➤20 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால் 249 IUC நிமிடங்கள் மற்ற தொலைதொடர்பு சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளரிடம் பேசிக்கொள்ளலாம். இதற்கு இணையாக 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும்.

➤50 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால் 656 IUC நிமிடங்கள் மற்ற தொலைதொடர்பு சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளரிடம் பேசிக்கொள்ளலாம். இதற்கு இணையாக 5 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும்.

➤100 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால் 1,362 IUC நிமிடங்கள் மற்ற தொலைதொடர்பு சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளரிடம் பேசிக்கொள்ளலாம். இதற்கு இணையாக 10 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும்.

மேற்கண்ட கட்டண முறையானது, ஜியோ வாடிக்கையாளர் மற்றொரு ஜியோ வாடிக்கையாளருக்கு செய்யும் அழைப்புகளுக்கு பொறுந்தாது. அது எப்போதும் போல இலவசமாகவே வழங்கப்படும். இன்கம்மிங் அழைப்புகளுக்கு எந்த கட்டணமும் கிடையாது. 

இந்த நடைமுறையானது வரும் அக்டோபர் 10 தேதி முதல் அமலுக்கு வருகிறது. ப்ரீ பெய்ட் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் இந்த கட்டண முறை பொறுந்தும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது