கொரோனாவுக்கு பலியான முதல் டாக்டர்...! நோயை ஒழிக்க போராடியவருக்கு ஏற்பட்ட கதி! எங்கு தெரியுமா?

கொரோனா வைரஸ் தாக்குதலினால் பிரான்ஸ் நாட்டின் முதல் வைத்தியர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 14,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 3,35,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

தற்போது வரை 176 நாடுகளில் இந்த கொடிய நோய் பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் இதுவரை கிட்டத்தட்ட 5,000-க்கும் மேற்பட்டோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதல் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. அந்நாட்டின் முதல் வைத்தியர் தற்போது இந்த நோய் தாக்குதலில் உயிரிழந்திருப்பது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் 59-வது பிராந்தியத்தில் லிலே வைத்தியசாலையில் மருத்துவர் ஜீன் ஜாக்வெஸ் பணியாற்றி வந்தார். இவர் மருத்துவத்துறையில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும் இந்த நோய் தாக்குதலை குறைப்பதற்காக மீண்டும் மருத்துவ பணியில் ஈடுபட்டு வந்தார். இவர் பணியாற்றி வந்த இதே மருத்துவமனையில் முதற்கட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய சேவையை போற்றும் வகையில் அந்நாட்டு மக்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவமானது பிரான்ஸ் நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.