விவசாயிகளுக்கு எதிரானது என்று மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து வேளாண் சட்டங்களை முறியடிக்க மாநிலசட்டப்பேரவைகளில் மசோதாக்கள் நிறைவேற்றுமாறு, காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
விவசாயத்தை அழிக்கும் வேளாண் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் நான்கு மசோதாக்கள்.

இதையடுத்து மத்தியஅரசுகொண்டு வந்த வேளாண் சட்டங்களை முறிய டிக்கும் வகையில் நான்கு மசோதாக்கள் பஞ்சாப் சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்குமாறு ஆளுநரை சந் தித்து முதலமைச்சர் அமரீந்தர் சிங் வலியுறுத்தினார்.
இதுகுறித்து பேசிய பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், “வேளாண் சட்டங் களால் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஏற்பட இருந்த பாதிப்பை தடுக்கும் நோக்கத் திலேயே இந்த மசோதாக்களை தாக்கல் செய்துள்ளோம். பஞ்சாப்விவசாயிகளுக்குஇழைக்கப் பட்ட அநீதிக்கு பணிந்து போவதைவிட நான் பதவி விலகத் தயாராக இருக்கிறேன். எனது ஆட்சி கலைக்கப்படுவதை சந்திக் கவும் தயார். இதற்கெல்லாம் நான் பயப் படவில்லை.
வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால், நிலைமை கைமீறி போய்விடும். ஆத்திரம் அடைந்துள்ள இளைஞர்கள், தெருவுக்கு வந்து விவசா யிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த வாய்ப்புள்ளது.’’ என்று தெரிவித்தார்.
பஞ்சாப்பை அடுத்து ராஜஸ்தான் மாநிலத்திலும் இதுபோன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக தெரியவந்துள்ளன.