கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவை போன்றிருப்பதாக கூறி இளம்பெண் ஒருவரின் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கவர்ச்சிக் கன்னி சில்க் ஸ்மிதா மறுபிறவி! வைரலாகும் வீடியோவால் பரபரப்பு!
1990-களில் தென்னிந்திய திரைப்படங்களில் கவர்ச்சியாக வலம் வந்தவர்கள் சில்க் ஸ்மிதாவும் ஒருவர். இவருடைய முகவசீகரமும், கவர்ச்சியும் மக்களை பெரியளவில் கவர்ந்திருந்தது. திடீரென்று 1996-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இது அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமின்றி மக்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்திருந்தது. இவ்வளவு ஆண்டுகள் கழித்த பிறகும் அவருடைய முகத் தோற்றத்தில் ஒரு பெண் இருப்பது போன்ற வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த பலர், வீடியோவில் வந்த பெண் முகத்தோற்றத்தில், சில்க் ஸ்மிதாவை போன்று இருப்பதாக சிலர் கமெண்ட் செய்துள்ளனர். ஆனால் இந்த பெண் யார் என்றும், அந்த வீடியோவில் இருப்பது யாரென்றும் இதுவரை யாராலும் கண்டுபிடிக்க இயலவில்லை.
இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.