எல்லா அழகுப் பெண்களுமே நடிகையாவோ,மாடலாகவோ ஆக வேண்டியதில்லை என்று தெளிவாக வழிகாட்டி இருக்கிறார் டெல்லியைச் சேர்ந்த கரீமா யாதவ்.
தேடி வரும் உலக அழகிப்பட்டம்! வேண்டாம் என இந்திய ராணுவத்தில் சேர்ந்த சூப்பர் அழகி! ஒரு ரியல் சல்யூட்!
சாரி,லெஃபினெண்ட் கரிமா யாதவ்.ஆம் 2017ல் இந்தியாவின் அழகுமுகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கரீமாவுக்கு உலக அழகிபோட்டிக்காக இத்தாலியில் இருந்து அழைப்பு வந்தது.அதே நேரம் அவருக்கு சென்னை ஆஃபீசர்ஸ் ட்ரெயினிங் அகாடமியில் இருந்தும் அழைப்பு வந்தது.கரீமா கொஞ்சம் கூட யோசிக்காமல் பெட்டியைத் தூக்கிக் கொண்டு சென்னைக்கு கிளம்பிவிட்டார்.
சிறுவயதிலிருந்தே தனி ஆளாகத் தன்னை வளர்த்த தாய்க்கு பெருமை தேடித் தரவேண்டும் என்று விரும்பி இருக்கிறார் கரீமா.அதற்காக ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு படித்து தேர்வு எழுதினார்.ஆனால்,அதில் வெற்றிபெற முடியவில்லை.இதற்கிடையே அவர் வேலைபார்த்த கம்பெனி நண்பர்கள் சொன்னதற்காக ஒரு பிரபல பெண்கள் பத்திரிகை நடத்திய அழகிப் போட்டியில் கலந்து கொண்டு 'மிஸ் பிரட்டி ஃபேஸ்' விருது பெற்றார்.
ஐ.ஏ.எஸ் தேர்வில் தோல்வியடைந்திருந்தாலும் சிறுவயதில் ராணுவம் நடத்திய சைனிக் ஸ்கூலில் படித்ததால் அடுத்த சாய்சாக ராணுவ அதிகாரிகளுக்கான நுழைவுத் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றார்.அதன் பிறகதான் இத்தாலி அழைப்பைத் தூக்கிப் போட்டுவிட்டு சென்னையில் இருக்கும் அகாடமியில் சேர்ந்தார் கரீமா.
பயிற்சிகளைப் பற்றிச் சொல்லும்போது துவக்கத்தில் தன் உடல் ஒத்துழைக்கவில்லை என்றும்,பிறகு தொடர்ந்து முயற்சித்து தன் உடலை உறுதி செய்து கொண்டேன்.இப்போது என்னால் பயிற்சியில் இருக்கும் மற்றவர்களுக்கு இணையாக அனைத்து டாஸ்க்களையும் செய்ய முடிகிறது என்று ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார் .
இப்போது பயிற்சி முடித்து இந்திய ராணுவத்தில் லெஃப்டினெண்ட் ஆகிவிட்ட கரீமா,அப்படியே காப்டன் ,மேஜர் என்று உயர்ந்து உலகின் அழகான ஜெனரலாக வாழ்த்துவோம்.