27 வயது நடிகருடன் 44 வயது நடிகை! வைரலாகும் உடற்பயிற்சி வீடியோ!

முன்னாள் மிஸ் இந்தியாவான சுஷ்மிதா சென் ரோமன் ஷால் என்பவரை காதலித்து வந்தார். காதல் முறிந்ததாக சமூக வலைத்தளங்களில் வெளியான புரளிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் சுஷ்மிதா சென் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.


சுஷ்மிதா சென் புகழ்பெற்ற பாலிவுட் நடிகைகளுள் ஒருவராவார். இவர் ரோமன் ஷால் என்பவரை காதலித்து வருகிறார். சமீப காலத்தில் இவர்கள் காதல் முறிந்ததாக சமூக வலைத்தளங்களில் புரளிகள் வெளியாகி வந்தன.

இதனை கண்டு ஆத்திரமடைந்த சுஷ்மிதாசென், அவற்றிற்கு  முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இருவரும் இணைந்து ஜிம்மில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தார். 

இதனை கண்ட பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருவரையும் பாராட்டி வருகின்றனர். ஒரு ரசிகர்,"நீங்கள் இருவரும் நீடூடி வாழ வேண்டும்" என்றும், மற்றொருவர்,"இருவரும் இணைந்து ஆக்ஷன் படம் ஒன்றில் நடிக்க வேண்டும்"என்றும் கூறியிருந்தார்.

ரோமன் சுஷ்மிதா சென்னின் அழகான புகைப்படம் ஒன்றை சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார். பதிவிற்கு கீழே  "என் குழந்தை மற்றொரு குழந்தையுடன்" என்று கூறியுள்ளார்.

சுஷ்மிதா சென் புகைப்படத்தின் மூலம் புரளிகளை விரட்டியடித்துள்ளது சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.