ஆடைகள் இல்லாமல் போட்டோ ரிலீஸ் பண்றான்! நான் விபச்சாரம் செய்றதா கட்டுரை எழுதுறான்! பிரபல நடிகைக்கு ஏற்பட்ட விபரீத ஆன்லைன் அனுபவம்!

பாலியல் ரீதியில் தன்னை துன்புறுத்திய நபர் மீது முன்னாள் மிஸ் இந்தியா மற்றும் மாடல் அழகி புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


2006-ஆம் ஆண்டில் "மிஸ் ஃபெமினா" விருது கற்றவர் நட்டாஷா சூரி. உலக அழகி காண போட்டியில் முதல் 10 இடங்களுக்குள் வந்தார். பாலிவுட் திரையுலகிலும், மலையாள திரையுலகிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதனிடையே, இவர் ஃப்ளின் ரெமோடியோஸ் என்பவர் மீது தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்துவதாக வழக்கறிஞருடன் சென்று தாதர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 24-ஆம் தேதியன்று பந்தர்குலா சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தார். அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அந்த புகாரில், "என்னை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தார். சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதல் அவர் என்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தி வந்தார். அவர் பல்வேறு புகைப்படங்களை பதிவேற்றம் செய்து ஆபாசமாக பல கட்டுரைகளை எழுதிவந்தார். குளியலறையில் நான் நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு என் பெயரை வைத்தார்.

மேலும் பல்வேறு நிர்வாண புகைப்படங்களை என்னுடைய தலையுடன் இணைத்து பரப்பினார். அவரிடம் பல பலமுறை கூறியும் அவர் நிறுத்தி கொள்ளவில்லை அதனால்தான் அவர் மீது தற்போது மீண்டும் புகாரளித்துள்ளேன்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த புகரானது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.