லாபம் கொட்ட வேண்டுமா..? உங்கள் ராசிக்கு ஏற்ப செய்யவேண்டிய பரிகாரம் இதோ...

ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசியினருக்கும் தொழில், வியாபாரங்களில் நஷ்டம் ஏற்படாமல் இருக்க, லாபம் பல மடங்காக பெருக சில பரிகார முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.


மேஷம் : மேஷ ராசியினர் தூய்மையான மஞ்சள்தூளை சிறிது எடுத்து ஒரு சிகப்பு நிற காகிதத்தில் மடித்து தாங்கள் தொழில் செய்யும் இடங்களில் உள்ள பணம் வைக்கும் கல்லா பெட்டியில் வைத்துக்கொள்ள உங்களுக்கு பணவரவுக்கு என்றும் குறை ஏற்படாது.

ரிஷபம் : ரிஷப ராசியினர் தாங்கள் வசிக்கும் இடத்தின் அருகில் லட்சுமி நாராயணர் கோவில் அல்லது மகாலட்சுமி கோவில் இருந்தால், அங்கு வெள்ளிக்கிழமை காலையில் சென்று ஒரு நெய் தீபத்தை ஏற்றி வழிபட பணம் கையில் இருந்துகொண்டே இருக்கும்.

மிதுனம் : தினமும் உங்கள் தொழில் அல்லது வியாபார இடங்களுக்கு செல்லும் போது உங்கள் குலதெய்வத்தையும், உங்கள் இஷ்ட தெய்வத்தையும் வேண்டிவர பணவரவு தாராளமாக இருக்கும்.

கடகம் : நீங்கள் ஒரு கற்பூரத்தைக் கொளுத்தி அதில் சிறிது செந்தூரத்தை போட்டு இரண்டும் நன்கு எரிந்து பஸ்பமான பின்பு, அந்த பஸ்பத்தை எடுத்து ஒரு வெள்ளை நிற காகிதத்தில் மடித்து, உங்கள் கல்லா பெட்டிகளில் வைத்துக்கொள்ள என்றுமே உங்கள் தொழில், வியாபாரங்களில் பணம் குறையாது.

சிம்மம் : நீங்கள் தொழில், வியாபாரம் செய்யும் இடங்களுக்குள் நுழையும் போதும், அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பும் போதும், அந்த இடங்களின் வாயிற்படியில் நுழையும் முன்பு அதன் வாயிற்படியை தொட்டு, மனதில் உங்கள் இஷ்ட தெய்வத்தையும் வேண்டிக்கொள்ளுங்கள்.

கன்னி : நீங்கள் தொழில், வியாபாரங்களில் லாபத்தை பெற, அந்த இடங்களை எப்போதுமே தூய்மையாக இருக்குமாறு வைத்துக்கொள்ள வேண்டும்.

துலாம் : நீங்கள் உங்கள் பெற்றோரையும், உங்கள் வாழ்க்கைத்துணையையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதன் மூலம் அவர்களின் அந்த மனநிறைவு உங்களுக்கு தெய்வங்களின் ஆசிகளைப் பெற்று தந்து உங்கள் தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் எப்போதும் வெற்றியைக் கொடுக்கும்.

விருச்சிகம் : அடிக்கடி உணர்ச்சிவசப்படும் நீங்கள் தினமும் காலையில் உங்கள் இஷ்ட தெய்வத்தை உங்கள் மனதில் சிறிது நேரம் தியானம் செய்து உங்கள் தொழில், வியாபாரங்கள் செய்யும் இடங்களுக்கு செல்ல, அன்றைய தினம் உங்களுக்கு பண விஷயங்களில் நன்மை ஏற்படும்.

தனுசு : நீங்கள் தொழில், வியாபாரம் செய்யும் இடங்களில், காலையில் சிற்றுண்டி உண்ணும் போது அதிலிருந்து சிறிதளவு எடுத்து ஒரு பசு மாட்டிற்கோ அல்லது ஒரு காக்கைக்கோ அளித்து விட்ட பிறகே நீங்கள் உண்ண வேண்டும்.

மகரம் : உங்கள் தொழில், வியாபாரங்களில் என்றுமே நல்ல லாபங்களை பெற தினந்தோறும் உங்கள் தொழில் நடக்கும் இடங்களில் பத்திகள் கொளுத்தி, காமாட்சி விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும்.

கும்பம் : நீங்கள் தொழில் அல்லது வியாபார இடங்களுக்கு செல்லும் முன்பு சிறிதளவு சர்க்கரை அல்லது வெல்லத்தை எடுத்து உங்கள் வீட்டிலோ அல்லது வீட்டிற்கு வெளியிலோ இருக்கும் எறும்புகளுக்கு உணவாக தந்து விட்டு செல்ல வேண்டும்.

மீனம் : நீங்கள் தொழில், வியாபாரங்களில் சாதிக்க உங்களுக்கு கல்வி அல்லது ஏதேனும் கலைகளை சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களுக்கு வஸ்திர, தன தானத்தைக் கொடுத்து அவர்களின் ஆசிகளை பெற வேண்டும்.