ரஜினி படத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்னரே புக்கிங் ஆரம்பித்துவிடும்.
ரஜினியின் தர்பார் வியாபாரம் இம்புட்டுத்தானா..? நஷ்டத்தில் வெளியாகும் படத்துக்கு சம்பள பணத்தை திருப்பித் தருவாரா ரஜினி?
ஆனால், தர்பார் படத்தின் விற்பனையே இன்றுதான் முடிவடைந்திருக்கிறது. ஏனென்றால், செலவு செய்த அளவுக்கு வருமானம் இல்லை என்கிறார் பி.ஆர்.ஓ. ராமன். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக கருதப்படுகிற ரஜினிகாந்த் தர்பார் படத்தில் நடிப்பதற்காக வாங்கிய சம்பளம் 118 கோடி ரூபாய். இயக்குனர் முருகதாஸ் சம்பளம் 25 கோடி.
நாயகி நயன்தாராவின் சம்பளம் 5 கோடி, ஆக மொத்தம் மூன்று பேருக்கு மட்டும் 148 கோடி ரூபாய். ஆக, தயாரிப்பு செலவு, விளம்பர செலவு எல்லாம் சேர்த்து 200 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தின் வியாபாரம் இம்புட்டுத்தான்.
தமிழக உரிமை 63.15 கோடி ரூபாய்
ஹிந்தி உரிமை -17 கோடி ரூபாய்
தெலுங்கு உரிமை- 7.5 கோடி ரூபாய்
தொலைக்காட்சி உரிமை -33 கோடி ரூபாய்
கர்நாடக மாநில உரிமை- 7 கோடி ரூபாய்
கேரள மாநில உரிமை- 5.5 கோடி ரூபாய்
வெளிநாட்டு வினியோக உரிமை -33 கோடி ரூபாய்
ஆடியோ உரிமை -5 கோடி ரூபாய்
ஆக மொத்தம் - 189.85 கோடி ரூபாய்க்கு தர்பார் படத்தின் வியாபாரம் முடிவடைந்துள்ளது. மொத்த முதலீட்டை கூட ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தின் மூலம் திருப்பி பெற முடியாத சூழலில், ரஜினி சம்பளத்தை விட்டுத்தருவாரா என்பதுதான் கேள்வி.