மாரபகப் புற்றுநோய் பற்றி அச்சமா? இதோ வராமல் தடுக்கும் வழிகள்!

பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை, குழந்தைப் பருவம் கடந்து ‘டீன் ஏஜ்’ பருவத்தை அடையும் போது உடல் உறுப்புகளின் வளர்ச்சி, குரலில் மாற்றம், மாதவிடாய்க் கால தொடக்கம், உணர்ச்சிகள், எண்ணங்களில் மாற்றம் என இயல்பில் பல மாறுதல்கள் நிகழும்.


இத்தகைய சூழலில், அவர்களது உணவு விஷயத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டிய கடமை பெற்றோருக்கு உண்டு. 12 முதல் 20 வயது வரை உடலையும் எண்ணங்களையும் சரியாகக் கவனித்தால் தான் அவர்களது வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும்’ எனப் பெரியவர்கள் சொல்வதுண்டு. இது உண்மையும் கூட. `டீன் ஏஜ்’ பருவத்தில் உட்கொள்ளும் உணவுகளைப் பொறுத்தே அவர்களது உடல் உறுப்புகள் வலிமையும் ஆரோக்கியமும் பெறும். அந்தவகையில், பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகளும், அது எதற்காக என்ற விளக்கத்தையும் தெரிந்து கொள்வோம்.

கார்போ ஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் நிறைந்த உணவுகள் மற்றும் தானியங்களை அதிகம் சாப்பிடும்போது உடலின் ஆற்றல் உற்பத்தி அதிகரிக்கும். உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது நல்லது. குறைந்த பட்சம் தினமும் ஒரு பழமாவது சாப்பிட வேண்டும்.

உடலின் இரும்புச்சத்து தேவைக்கு கேழ்வரகு, கீரை, எள், மீன், முட்டை சாப்பிடலாம். இது இளம்வயது பெண்களுக்கு, மாதவிடாய் கால பிரச்சனைகளை தீர்க்க உதவும். இளம்வயது பருவத்தினர் பலரும் பால் சார்ந்த பொருட்களை ஒதுக்கி விடுகின்றனர். ஆனால் பால், சீஸ், தயிர் போன்றவற்றை அவசியம் உட்கொள்ள வேண்டும். இதனால் இதயம் பாதுகாப்பாகவும், தசைகள் வலிமையாகவும் இருக்கும்.

எண்ணெய் நிறைந்த உணவு பொருட்களை உட்கொள்வது, பருமனை ஏற்படுத்தும். இளம்வயது பருவத்தில் பெண்களுக்கு ஏற்படும் பருமனே நீர்க்கட்டி, கர்ப்பப்பை தொடர்பான பல பிரச்சனைகளுக்கு அடித்தளமாக அமையலாம். முடிந்தவரை எண்ணெய், நெய் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

தண்ணீர் அதிக அளவில் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு, குறைந்த பட்சம் இரண்டு லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். மார்பகப் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு ப்ரோக்கோலி, க்ரீன் டீ சாப்பிடலாம். பெண்களுக்கு ஹhர்மோன் மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க வைட்டமின் நு மற்றும் வைட்டமின் ஊ அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டும். குறிப்பாக, நட்ஸ் வகைகள் மற்றும் மீனை சாப்பிடலாம்.

நரம்பு மண்டலத்தை பாதுகாக்க பீட்ரூட், கேரட், அவகோடா போன்றவற்றை சாப்பிடலாம். காலை உணவைத் தவிர்க்கவோ, நேரம் தவறிச் சாப்பிடவோ கூடாது. இத்தகைய பழக்கங்கள் ஆற்றல் உற்பத்தியைக் குறைக்கும் என்பதால், படிப்பில் கவனச் சிதறல் ஏற்படக்கூடும். அத்துடன் ஹார்மோன் பிரச்னைகளும் ஏற்படலாம். உடலில் கெட்ட கொழுப்பை அதிகரித்து, எடையை அதிகரிக்கவும் செய்யலாம்.

மதிய உணவைப் பொறுத்தவரை, பள்ளிக் குழந்தைகளிடையே நேர ஒழுக்கம் சரியாக இருக்கும். ஆனால், கல்லூரி மாணவர்கள் நேரம் தவறிச் சாப்பிடுகிறார்கள் அல்லது மிகவும் குறைந்த அளவே உணவு எடுத்துக் கொள்கிறார்கள். பெரும் பாலானவர்கள், காலை உணவை 11 மணிக்கும் மதிய உணவை 4 மணிக்கும் சாப்பிடுகிறார்கள். இத்தகைய பழக்கங்கள், உடல் உறுப்புகளின் வளர்ச்சியைப் பாதிக்கும். வளர்சிதை மாற்றங் களையும், அது தொடர்பான வேறு சில பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.

ஒரு நாளைக்கான உணவை சிறிது சிறிதாக ஆறு முறை சாப்பிடுவது, சீரான அளவு மூன்று வேளை சாப்பிடுவது என இரண்டுமே சரியான உணவுப் பழக்கம் தான். ‘மூன்று வேளை உணவு’ என்ற கணக்கு, ஆறு என அதிகரிக்கலாமே தவிர குறையக் கூடாது. ஒரு வேளை சாப்பிட வில்லை என்றாலும் வைட்டமின், கார்போ ஹைட்ரேட், தாதுச்சத்துகள் போன்ற உடலுக்குத் தேவைப்படும் ஆற்றல் கிடைக்காமல் போகக்கூடும்.