முதல் இரவு! மனைவியை திருப்திபடுத்த கணவன் செய்ய வேண்டியது இது தான்!

திருமணம் முடிந்து முதல் இரவை மனைவியுடன் கழிக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் பல நாட்கள் காத்திருப்பது இயல்பான ஒன்று. பல ஆண்கள் திருமணத்தை மிகவும் விரும்புவதற்கு காரணமே இந்த முதலிரவு தான்


ஆனால் முதலிரவு குறித்து ஆண்களிடம் பல்வேறு தவறான புரிதல்கள் இருக்கிறது. நண்பர்கள் கூறுவது, டுபாக்கூர் செக்ஸ் டாக்டர்களின் அறிவுரை, திரைப்பட காட்சிகள் போன்றவற்றை வைத்து முதலிரவு குறித்து உண்மைக்கு மாறான சில கண்ணோட்டத்தை ஆண்கள் வைத்திருப்பர்.

ஆனால் முதலிரவு என்பது முழுக்க முழுக்க செக்ஸ் சார்ந்தது மட்டும் அல்ல. முதலிரவுக்கு செல்லும் தம்பதியினர் முதல் முறையே செக்ஸ் வைத்துக் கொள்வார்களா என்றால், பெரும்பாலும் இல்லை. முதலிரவு என்பது உங்களுடைய அந்தரங்க வாழ்க்கைக்கான முதல் நாள். இந்த நாளிலேயே நீங்கள் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை. மேலும் உச்சகட்டத்தை அடைய வேண்டும் என்றும் கட்டாயம் இல்லை. பலவித எதிர்பார்ப்புகளுடன் முதலிரவுக்கு செல்லும் ஆண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

1) மனைவியின் சம்மதம் மிக மிக முக்கியம் : என்ன தான் நீங்கள் தாலி கட்டிய மனைவி என்றாலும் கூட முதலிரவில் அவரை தொட வேண்டும் என்றால் முதலில் அவரது விருப்பத்தை தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மனைவியின் அனுமதி இல்லாமல் அவரது சுண்டு விரலை கூட தொட வேண்டாம். மாறாக உங்கள் மனைவிக்கு முதலில் முன்விளையாட்டு மற்றும் செக்ஸ் தொடர்பான விருப்பம் இருக்கிறதா? அல்லது தயக்கம் இருக்கிறதா? என்று தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் அவரையும் செக்சுக்கு தயார் படுத்தி உங்கள் விளையாட்டை ஆரம்பியுங்கள்.

2) மது அருந்த கூடாது: முதலிரவுக்கு செல்லும் ஆண்கள் தைரியம் வேண்டும் என்பதற்காக மது அருந்தும் பழக்கத்தை புதிதாக ஆரம்பித்துள்ளனர். மது அருந்திவிட்டு சென்றால் மனைவியுடனான செக்ஸ் வெற்றிகரமாக அமையும் என்று நண்பர்கள் கூறியதை நம்பி செல்லும் ஆண்களுக்கு ஏமாற்றமே கிடைக்கும். மது அருந்திய பிறகு என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலையில் முதலிரவு சோகமான இரவாக முடியவே வாய்ப்பு இருக்கிறது.

3) விறைப்புத்தன்மை இல்லாமல் போகலாம்: முதலிரவில் உங்கள் மனைவியை நீங்கள் அணுகும் போது உங்கள் உறுப்பில் இருக்கும் விறைப்புத்தன்மை சில நிமிடங்களில் இல்லாமல் போகலாம். அதாவது உங்களால் தொடர்ந்து செக்சில் ஈடுபட முடியாத ஒரு நிலை ஏற்படலாம். இதற்கு முதல் காரணம் கலைப்பு. இரண்டாவது காரணம் நீங்கள் செக்ஸ் வைத்துக் கொள்ள முயற்சிக்கும் பெண் உங்கள் வாழ்வில் புதியவர். இந்த இரண்டு காரணங்களாலும் பெரும்பாலானவர்களுக்கு முதலிரவில் செக்ஸ் ஒர்க் அவுட் ஆகாது. எனவே இதனை நினைத்து கவலைப்பட வேண்டாம். அடுத்தடுத்து முறைகளில் தூள் கிளப்பலாம்.

4) முன்கூட்டியே வெளியேறுதல் : முதலிரவில் முன் விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் போதே சில ஆண்களுக்கு விந்து வெளியேறிவிடும். இதனால் தொடர்ந்து முன்விளையாட்டில் கூட ஈடுபட முடியாத நிலை ஆண்களுக்கு ஏற்படும். அருமையான ஒரு மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் ஆண்களுக்கு இயல்பாகவே உற்சாகம் கரைபுரண்டு ஓடும். இதன் காரணமாக முன்கூட்டியே விந்து வெளியேறிவிடும். இதிலும் பிரச்சனை இல்லை. அடுத்தடுத்த முறைகளில் தானகவே இது சரியாகிவிடும்.

5) மனைவியை திருப்தி படுத்துதல் : செக்சில் மிக முக்கியமான ஒரு விஷயம் நமது பார்ட்னரை திருப்தி படுத்துதல். செக்ஸ் தொடர்பாக நமக்கு இருக்கும் எதிர்பார்ப்பு நமது பார்ட்னருக்கும் இருக்கும். ஆனால் முதலிரவில் நாம் நமது பார்ட்னரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்சிக்கலாம். ஆனால் பெரும்பாலும் ஆண்களால் முதலிரவில் தங்கள் மனைவிகளை திருப்தி படுத்த முடியாது. ஏனென்றால் அன்றைய தினம் டென்சனில் செக்சை முடித்தால் போதும் என்கிற எண்ணம் தான் கணவனுக்கு இருக்கும். இதனால் உங்கள் மனைவிக்கு உச்சகட்டம் கிடைக்கவில்லை என்றால் அதற்கு காரணம் நீங்கள் இல்லை. ஆனால் இதே நிலை நீடிக்க கூடாது. மனைவியின் விருப்பத்தை அறிந்து அவருக்கும் உச்சகட்ட சுகத்தை கொடுக்க வேண்டியது கணவன்களுக்கு அவசியம்.

 இந்த விஷயங்களை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு முதலிரவுக்கு செல்லுங்கள் உங்கள் அந்தரங்க வாழ்வை அட்டகாசமாக துவக்குங்கள்.