41 வயதில் 24 வயது மதுரைப் பொன்னை வளைத்துப் போட்ட விஜய்சேதுபதி..! யார் தெரியுமா?

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து " சைரா நரசிம்மா ரெட்டி " என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்த விஜய் சேதுபதி தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். 

நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ள 33 ஆவது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த திரைப்படத்திற்கு "யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்று படக்குழுவினர் பெயரிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தை வெங்கடகிருஷ்ணன் என்னும் அறிமுக இயக்குனர் இயக்க உள்ளார். மேலும் இந்தத் திரைப்படத்தில் இயக்குனர் மகிழ்திருமேனி வில்லனாகவும் நடிகர் விஜய் சேதுபதி இசை கலைஞராகவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை மேகா ஆகாஷ் நடிக்கப் போவதாகவும் படக்குழுவினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 

இதனைத்தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதிதளபதி விஜயுடன் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.