உலகம் முழுவதும் 65ஆயிரம் பேர் பலியாக நான் தான் காரணம்! கொரோணாவை கண்டுபிடித்த பெண் டாக்டர் திடீர் மாயம்!

கொரோனா வைரஸை கண்டுபிடித்த முதல் மருத்துவர் தற்போது மாயமாக உள்ள செய்தியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 65,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 12,50,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் முதன்முதலில் இந்த வைரஸை கண்டுபிடித்த பெண் மருத்துவர் மாயமாகி உள்ள செய்தியானது வைரலாகி வருகிறது. அதாவது சீனா நாட்டின் வூஹான் மாகாணத்தில் உள்ள மருத்துவமனைக்கு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி அன்று ஒரு நோயாளி தீவிர காய்ச்சலுடன் வந்துள்ளார்.

அந்த நோயாளிக்கு மருத்துவமனையின் மூத்த பெண் அதிகாரியான ஏய் பென் ரத்த பரிசோதனை மேற்கொண்டிருந்தார். அப்போது அந்த பரிசோதனையில் முதன்முதலில் சார்ஸ் அல்லது ஃபுளு காய்ச்சல் தான் இருக்கக்கூடும் என்று அவர் நம்பினார். ஆனால் போகப்போக இரத்த பரிசோதனையில் புதுமாதிரியான வைரஸ் தெரியவந்துள்ளது. 

ஆனால், இதுகுறித்து அவர் கூற முயற்சித்தபோது, சீனா அரசாங்கம் அவருக்கு ஒப்புதல் வழங்கவில்லை. மேலும் வதந்திகளை பரப்புதல் மற்றும் ஸ்திரத்தன்மைக்கு கூறு விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் அந்நாட்டு அரசாங்கம் அவரை எச்சரித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் ஒருபோதும் ஊடகத்திற்கு அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. "வூஹான் மாகாணத்தில் முதன்முதலில் இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபரை பரிசோதித்து நான்தான். தொடர்ந்து அவரை போன்று பல நபர்கள் எங்கள் மருத்துவமனைக்கு வருகை தந்தனர். அப்போது அவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான இரத்த பரிசோதனை முடிவுகள் வந்தன. 

அப்போதே நாங்கள் விழிப்புணர்வுடன் இந்த வைரஸ் பரவாமல் இருப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்து இருக்க வேண்டும். இன்று என்னால் தான் இந்த வைரஸ் உலகம் முழுக்க பரவியுள்ளது" என்று வேதனை தெரிவித்துள்ளார்.

தற்போது ஏய் பென் எங்கு இருக்கிறார் என்பது குறித்து யாருக்கும் தெரியாத காரணத்தினால், அவர் தனிச் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கலாம் என்ற கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த செய்தியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.