மத்திய பிரதேசத்திலுள்ள பிரபல ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாரும் ஓடுங்க..! பற்றி எரிந்த ஓட்டல்..! பதறி அடித்து ஓடிய மக்கள்! பட்டப்பகல் சம்பவம்!

மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு பிரபலமான கோல்டன் ஹோட்டல் அமைந்துள்ளது. நேற்றிரவு இங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ வேகமாக பரவியது. கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மிகுந்த சிரமத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டவுடன் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். சில மணிநேரத்திற்குப் பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவமானது மத்தியபிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.