திடீரென பற்றி எரிந்த கிறிஸ்தவ தேவாலயம்! உடல் கருகி உயிரிழந்த கணவன் மனைவி! அதிர வைத்த சம்பவம்!

புகழ்பெற்ற கிறிஸ்துவ தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவமானது மேகாலயாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங். நேற்று காலை எதிர்பாராவிதமாக கிறிஸ்துவ தேவாலயம் தீப்பிடித்து எரிந்துள்ளது. தேவாலயத்திற்கு அருகே அமைந்துள்ள பல வீடுகளிலும் தீ வேகமாக பரவியது.

துரதிஷ்டவசமாக ஒரு வீட்டில் முதிய தம்பதி வசித்து வந்தனர். அவர்களால் வெளியே எழுந்துவர இயலவில்லை. புகை மூட்டத்தில் சிக்கிக்கொண்டனர். சில நிமிடங்களுக்குப் பிறகு மூச்சுத்திணறி வீட்டிற்குள்ளேயே உயிரிழந்தனர். இந்த கோர விபத்தினால் கிறித்துவ தேவாலயம் முழுவதும் சேதமடைந்தது.

இந்த சம்பவமானது மேகாலயா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.