மளமளவென பற்றி எரிந்த தீ! 43 பேர் உடல் கருகி பலி! ஆனால் 11 பேரை ஒற்றை ஆளாக காப்பாற்றி மாஸ் காட்டிய நிஜ ஹீரோ!

டெல்லி தானிய கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேரை மீட்டுப்படை அதிகாரி ஒருவர் பத்திரமாக மீட்ட சம்பவமானது அனைவரையும் உருக செய்துள்ளது.


டெல்லியில் அனாஜ் தானிய கிடங்கு என்னும் இடம் அமைந்துள்ளது. அங்கீகாரம் இல்லாமல் இந்த கிடங்கிற்குள் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக, கிடங்கு முழுவதிலும் தீ மளமளவென பரவியுள்ளது. 

இந்த விபத்தில் இதுவரை 43 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தீ விபத்து ஏற்பட்டவுடன் அப்பகுதிக்கு அருகேயுள்ள தீயணைப்பு படையினருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. உடனடியாக மீட்புப்படையினர் குழுவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். முதன்முதலில் ராஜீவ் சுக்லா என்ற மீட்புப்படை அதிகாரி உள்ளே சிக்கியவர்களை காப்பாற்றுவதற்காக விரைந்து சென்றுள்ளார்.

உயிருக்கு போராடி கொண்டிருந்த 11 பேரை பத்திரமாக மீட்டெடுத்து வெளியே அழைத்து வந்துள்ளார். இதனிடையே அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. தனக்கு ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாத அவர் மீட்புப்பணி முடியும்வரை சம்பவ இடத்திலேயே இருந்து தன்னால் இயன்ற முயற்சிகளை எடுத்து வந்துள்ளார்.

அதன்பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். பின்னர் டெல்லியின் எரிசக்தி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக சத்தியேந்திர ஜெயின் மருத்துவமனைக்கு சென்று ராஜேஷ் சுக்லாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

சமூக வலைத்தளங்களில் பலர் ராஜேஷ் சுற்றுலாவின் வீரதீர செயல்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர். இந்த சம்பவமானது டெல்லியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.