வீட்டுக்குள் புகுந்து ஸ்ரீரெட்டி மீது பாய்ந்த பைனான்சியர்! நள்ளிரவில் நிகழ்ந்த பகீர் சம்பவம்!

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி வாய்ப்பிற்காக தன்னை தாரை வார்த்துவிட்டு, ஏமாற்றம் அடைந்து பல புகார்களைக் கூறியவர்.


முன்னணி நடிகர்களான ஸ்ரீகாந்த், இயக்குனர் முருகதாஸ், பவன் கல்யாண் ராகவா லாரன்ஸ் ஆகியோர் தன்னை துஸ்பிரயோகம் செய்து விட்டதாகவும் அவர் பேசி இருந்தார்.

 இப்படி வாரத்திற்கு ஒருமுறை ஒவ்வொருவரின் மீதாக புகார்களை கூறிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் சினிமா பைனான்சியர் சுப்பிரமணியன் மீது கோயம்பேடு (வளசரவாக்கம்) காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. 

இந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது.சினிமா பைனான்சியர் சுப்பிரமணி மற்றும் அவரது உறவினர் கோபி ஆகியோர் நேற்று இரவு என் வீட்டிற்கு வந்தனர், அப்போது அவர்கள் குடித்துவிட்டு வந்து இருந்தனர், நான் அவர்களை எனது வீட்டிற்கு அழைக்கவில்லை, ஆனாலும் என்னை மீறி என் வீட்டிற்குள் வந்த அவர்கள், என்னை கெட்டவார்த்தையால் திட்டி என்னிடம் வம்பு செய்தனர் என்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில்  புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் நேற்று இரவு சுப்பிரமணி மற்றும் அவரது உறவினர் ஸ்ரீ ரெட்டி வீட்டிற்கு எதற்கு சென்றனர் என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. ரெட்டி அவர்களை அழைத்தாரா? அல்லது இவர்கள் வேறு ஏதாவது ஒரு வேலைக்குச் சென்றனறா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.