பிரேமலதாவுடன் மோதல்! தேமுதிகவை உடைக்கும் அதிருப்தி கோஷ்டி தி.மு.க.வில் தஞ்சம்!

ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்து வெற்றிபெற்று, அதன்பிறகு அவரை எதிர்த்த காரணத்தால் தே.மு.தி.க.வில் இருந்து பலர் வெளியேறி கட்சியை கலகலக்க வைத்தனர். அதன்பிறகு கடந்த 2016 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி சேராத காரணத்தால், தேமுதிகவில் ஒரு பிளவு ஏற்பட்டது.


அதே போன்றே தற்போதும் ஒரு நிலை நிலவுகிறது. தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்ற அனகை முருகேசன் மற்றும் இளங்கோவன் இருவரையும், சொதப்பிவிட்டதாக பிரேமலதாவும் சுதீஷும் துவைத்து எடுத்துவிட்டார்களாம். அதனால்தான், இருவரும் ஒப்பந்தம் கையெழுத்தான நேரத்தில் எட்டிப் பார்க்கவில்லை.

அதேபோன்று நேரத்திற்கு நேரம் கூட்டணி மாறும் கொள்கை பிடிக்காமல் மூன்று மாவட்டச் செயலாளர்கள் கட்சியில் இருந்து வெளியேறும் நிலையில் இருக்கிறார்கள். 

இந்த விவகாரம் அறிந்துகொண்ட தி.மு.க.வின் முக்கியப் புள்ளி ஒருவர், அனைவரையும் அழைத்துப் பேசினாராம். இப்படி மனக்கசப்புடன் அங்கே இருப்பதைவிட, ஒட்டுமொத்தமாக தி.மு.க.வுக்கு வாருங்கள், ஏதேனும் பொறுப்பு வாங்கித் தருகிறேன் என்றுசொல்லி இருக்கிறாராம்.

அதனால் இந்த வாரம் தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடும் நேரத்தில், கட்சி உடைந்து தி.மு.க.வில் சிலர் சேர்ந்த செய்தியும் அதிரடியாக வெளியே வருமாம். துரைமுருகனை நாரதர் என்று பிரேமலதா சொன்னார். அந்த வேலையை மிகச்சிறப்பாக செய்துவருகிறார் துரைமுருகன்.