விலங்குகளை போல் அடைத்து வைத்திருக்கிறார்கள்! காஷ்மீரில் இருந்து வெளியாகும் பரிதாபக் குரல்! முதலமைச்சர் மகளுக்கே இந்த கதியா?

தன் தாயை போன்று தன்னையும் வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக மெகபூபா முப்தியின் மகள் கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


2 வாரங்களுக்கு முன்னர் இந்தியாவில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து இந்தியாவின் உள்துறை அமைச்சரான அமித் ஷா இரு அவைகளிலும் மசோதாக்களை தாக்கல் செய்தார். இதற்கு நன்றி தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. குறிப்பாக 3 முன்னாள் முதலமைச்சர்களை வீட்டுச்சிறையில் வைத்திருந்தது யாருக்கும் பிடிக்கவில்லை.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சரான மெகபூபா முப்தியின் மகளான இல்டிஜா ஜாவேத் 2-வது முறையாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில் அவர், "என் தாயை போலவே நானும் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டு உள்ளேன். எங்களை வெளியேவிட அனுமதி மறுக்கின்றனர். மேலும் ஊடகங்களிடம் பேசினால் கடுமையான விளைவுகளை சந்திக்க இயலும் என்று மிரட்டுகின்றனர். 

காஷ்மீர் பகுதியில் மக்கள் அனைவரும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அவர்களை அதிகாரிகள் மிருகங்கள் போன்று நடத்துகின்றனர். நாட்டின் அப்பகுதியில் உள்ள மக்கள் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் காஷ்மீர் பகுதியில் வாழும் மக்கள் விலங்குகளைப் போன்று கூண்டில் அடைக்கப்பட்டு உள்ளனர். 

உண்மையை உரக்கச் சொன்ன காரணத்தினால் சிறைக்கைதி போன்று என்னை நடத்துகின்றனர்.  மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் குடிமக்களின் அடிப்படை உரிமைகளில் பேச்சுரிமை தகர்க்கப்பட்டுள்ளதை என்னால் நினைத்துப் பார்க்கவே இயலவில்லை. காஷ்மீரிகள் அனைவரும் கைதிகள் உணருகின்றனர்"

இவ்வாறு ஜாவேத் உள்துறை அமைச்சராகவும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி அனுப்பினார். இதையே வாய்ஸ் மெசேஜாகவும் அவர் வெளியிட்டார். இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.