மாமல்லபுரத்தில் வெண்ணை உருண்டை பார்வையிடுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படபோவதாக சுற்றுலா துறையினர் அறிவித்துள்ளனர்.
மோடி - ஜின்பிங் புண்ணியம்! வெண்ணை உருண்டை பாறையை பார்க்க இனி காசு..பணம்..துட்டு..! மாமல்லபுரம் பரிதாபம்!
சென்னையின் மிகப்பெரிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக மாமல்லபுரம் விளங்குகிறது. சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருவரும் கடற்கரை கோவில், அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், வெண்ணை உருண்டை ஆகிய இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தனர்.
இரு நாட்டு தலைவர்களின் வருகையையொட்டி பொதுமக்களுக்கு அங்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பொதுமக்களுக்கான தடை தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் இரு நாட்டு தலைவர்கள் பார்த்து அனைத்து இடங்களுக்கும் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
சுற்றுலா துறையினர் ஏற்கனவே ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு ஆகியவற்றை பார்ப்பதற்கு கட்டணம் வசூலித்து வருகின்றனர். தற்போது வெண்ணெயை உருண்டையை பார்ப்பதற்கும் கட்டணம் வசூலிக்கப்பட போவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தொல்லியல் நிபுணர் ஒருவர் கூறுகையில், " வெண்ணை உருண்டை பாறை பகுதியை பார்ப்பதற்கு மக்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதல் பராமரிப்பு செய்வதற்காக மக்களிடம் கட்டணம் வசூலிக்கப்போடுகிறது" என்று கூறினார்.
வெண்ணை உருண்டை பாறையின் கீழ் புகைப்படம் எடுப்பதற்கு வெளி மாநில சுற்றுலா பயணிகளும், வெளிநாட்டவர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.