குழந்தைக்கும் ஆம்பிளைக்கும் தொடர்பு இருக்கா .. அப்பாக்கள் நிச்சயம் படிக்க வேண்டியது !!

குழந்தை உருவாக்கத்தில் தந்தைக்கும் பங்கு இருப்பது போலவே, குழந்தை வளர்ப்பிலும் பங்கு இருக்கவேண்டும். அப்போதுதான் தாய்க்கு ஓய்வும் குழந்தைக்கு கூடுதல் பாசமும் கிடைக்கும். அதோடு தாய்மைக்கு நிகரான தந்தையுணர்வும் ஆணுக்குக் கிடைக்கும்.


·         குழந்தையைத் தூக்கினால் மலம், சிறுநீர் கழிக்கும், வாந்தி எடுக்கும் என்ற அச்சத்தையும் அசூயையையும் ஆண் தவிர்க்க வேண்டும்.

·         குழந்தையின் கழுத்தை எப்படி பிடித்து, எப்படி தூக்கவேண்டும் என்பதை தந்தை தெளிவாக கற்றுக்கொள்ள வேண்டும்.

·         குழந்தையை தூங்கவைப்பது, குழந்தையை குளிப்பாட்டுவது போன்ற பணிகளிலும் தந்தையை ஈடுபடுத்த வேண்டும்.

·         காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறப்பவர் என்றாலும் தினமும் குறிப்பிட்ட நேரம் குழந்தையுடன் செலவழித்தே தீரவேண்டும்.

தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது பிள்ளையுடன் தனியே இருக்கவேண்டும். பிள்ளைக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொடுப்பதோடு தங்கள் பணி முடிந்துவிட்டதாக ஆண்கள் நினைக்கக்கூடாது. என்றென்றும் தாயுடன் இணைந்து குழந்தை வளர்ப்புக்குத் துணை புரிவதுதான் நல்ல ஆணின் கடமை.