22 வயதிலேயே கல்யாண வெறி! தங்கைக்காக காத்திருக்க மறுப்பு! இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

தங்கைக்கு பிறகு திருமணம் செய்து வைப்பதாக தந்தை கூறியதால் மனமுடைந்த அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது தூசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மாமந்தூர் பகுதிக்கு அருகே தூசி என்னுமிடம் அமைந்துள்ளது. கன்னிகாபுரம் என்னும் பகுதி தூசிக்குட்பட்டதாகும். இந்த பகுதியில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகனின் பெயர் சரவணன். இவருடைய வயது 22. இவருக்கு ஒரு தங்கை உள்ளார்.

ஞானசேகரன் மற்றும் அவரது மனைவி பெண்ணுக்கு திருமண வரன்கள் பார்த்து கொண்டிருந்தனர். பல மாதங்களாகியும் வரன்கள் சரியாக அமையவில்லை. இதற்கிடையே சரவணனுக்கு திருமணம் ஆசை வந்துள்ளது.

தன் பெற்றோரிடம் தாக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளார். அதற்கு ஞானசேகரன் மற்றும் அவரது மனைவி மறுத்துள்ளனர். மேலும் தங்கைக்கு திருமணம் செய்த பிறகு திருமணம் செய்து கொள்வதுதான் அண்ணனுக்கு அழகு என்றும் உபதேசித்து உள்ளனர். 

இதனால் சரவணன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். சில தினங்களுக்கு முன்னர் தன் பெரியப்பாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். தனிமையில் இருந்ததால் அவருடைய கவலைகள் அதிகமாக தொடங்கியுள்ளன. மனவிரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் பார்த்து சரவணனை மீட்டனர். பின்னர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததால் அவரை செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சரவணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தூசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவமானது தூசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.