பெற்ற மகளுக்கு மது கொடுத்து, போதை ஏற்றி! சீ சீ இப்படியும் ஒரு காமக் கொடூரனா?

சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்ற மனிதநேயமற்ற செயலை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் புரட்சி வெடித்துள்ளது. தந்தை ஒருவர் தன் 4 வயது மகளுக்கு மது அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அந்த குழந்தையின் தந்தை துபாயில் மரைன் என்ஜீனியராக  5 வருடங்கள் பணியாற்றினார். ஒரு ஆண்டிற்கு முன்பு இந்தியா திரும்பினார். இவருடைய மனைவி வில்லிவாக்கத்தில் உள்ள சலூன் கடையில் பணியாற்றி வருகிறார்.

குழந்தையின் தந்தை அதிகமாக மது அருந்தியிருந்தார். அந்த குழந்தைக்கு மதுவை வலுக்கட்டாயமாக அளித்துள்ளார். அந்தக் குழந்தை தன் சுயநினைவை இழந்த நிலையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த கோர சம்பவத்தின் போது குழந்தையின் தாயார் வீட்டில் இல்லை

வீட்டிற்கு வந்தவுடன் குழந்தையைப்பற்றி கணவனிடம் விசாரித்தார். அதற்கு அவர் அடிப்பட்டதனால் மயங்கி இருக்கும் என்று கூறியுள்ளார். பதற்றத்துடன் அந்த தாயார் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு மது கொடுத்திருப்பதாகவும், சுயநினைவை இழந்த நிலையில் கற்பழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

உடனே தாயார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குழந்தையின் தந்தையை POSCO சட்டத்தில் கைது செய்துள்ளனர். இந்த கோர சம்பவத்தை தாங்க இயலாமல் அந்த குழந்தையின் தாயார் நிலையை விவரிப்பதற்கு வார்த்தையே இல்லை என்று அந்தப்பகுதி மக்கள் வருந்துகின்றனர்