திருவள்ளுர் அடுத்த அமைந்துள்ள செவ்வாப்பேட்டை பகுதியில் வசித்து வரும் முன்னால் தலைமை காவலரான ஒருவர் தன்னுடைய சொந்த மகளை காதல் திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக ஆசிட் வீசி தாக்குதல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் கல்யாணம் செய்து கர்ப்பமாவா இருக்க? பெற்ற மகளை கடத்தி பெற்ற தந்தை செய்த கொடூர செயல்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!
பாலாஜி மற்றும் பாக்கியலட்சுமி என்ற தம்பதியினர் திருவள்ளூர் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர் இவர்கள் இருவருக்கும் சாய்குமார் (24 வயது) என்ற மகன் உள்ளார். சாய்குமார் படித்து முடித்துவிட்டு சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பணி நிமித்தமாக சென்னையில் தங்கி இருந்தபோது தீபிகா என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது. தீபிகாவின் தந்தை ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை காவல் அதிகாரி ஆவர். அவரும் திருவள்ளூர் மாவட்டத்திலேயே வசித்து வருகிறார். சாய்குமாரும் தீபிகாவும் ஒருவரை ஒருவர் காதலிப்பது தீபிகாவின் தந்தைக்கு தெரிய வந்துள்ளது.
இதனால் அவர் உடனடியாக தன் குடும்பத்தினருடன் தான் தங்கியிருந்த வீட்டை விட்டு காலி செய்து திருத்தணிக்கு இடம்பெயர்ந்து இருக்கிறார். இதனையடுத்து சாய்குமார் பெங்களூருவில் வேலை கிடைத்ததால் அங்கு சென்று பணியாற்றி வந்திருக்கிறார். இந்நிலையில் தீபிகா தன் வீட்டைவிட்டு வெளியேறி கடந்த ஜூன் மாதம் சாய்குமாரை பெங்களூருவில் வைத்து திருமணம் செய்திருக்கிறார்.
இதனை அறிந்த தீபிகாவின் தந்தை கடும் கோபத்திற்கு உள்ளாகி இருக்கிறார். பின்னர் தீபிகா தன் கணவருடன் பெங்களூருவில் பல மாதங்கள் தங்கி இருந்திருக்கிறார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக தான் தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தீபிகா 5 மாத கர்ப்பிணியாக இருந்து இருக்கிறார்.
இதனைப் பற்றி அறிந்த தீபிகாவின் தந்தை பாலகுமார் தன் மகளைப் பார்ப்பதற்காக சென்றிருக்கிறார். தன் தந்தை தன்னிடம் பாசமாக தான் நடந்து கொள்கிறார் என்று தீபிகாவும் நம்பியிருக்கிறார். தீபிகாவின் வீட்டில் ஆள் இல்லாத பொழுது உள்ளே நுழைந்து அவரிடம் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவரை நீ வந்து பார்த்தே ஆக வேண்டும் எனவும் கட்டாயப் படுத்தி இருக்கிறார்.
இதனைக்கேட்ட தீபிகா தன் தந்தையின் மீது சந்தேகம் அடைந்து வீட்டிற்கு செல்ல மறுத்திருக்கிறார் . உடனே பாலகுமார் தன்னுடன் அழைத்து வந்த நான்கு பேரையும் வைத்து தீபிகாவை தரதரவென இழுத்து தன் காரில் ஏற்ற முயற்சித்திருக்கிறார். உடனே இதனைப் பார்த்த தீபிகாவின் மாமியார் பாக்கியலட்சுமி மற்றும் மற்றொரு மருமகளும் இணைந்து தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தீபிகாவின் தந்தை பாலகுமார் அவர்கள் இருவர் மீதும் ரசாயனம் கலந்த அமிலத்தன்மை வாய்ந்த பவுடரை முகத்தில் பூசி இருக்கிறார்.
அமிலத்தன்மை வாய்ந்த அந்த பவுடரை பூசியதும் பாக்கியலட்சுமியும் அவருடைய மற்றொரு மருமகளான சந்தியாவும் வலியில் துடித்து உள்ளனர் . இந்த நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாலகுமார், மகள் தீபிகாவை தரதரவென இழுத்து தன் காரில் கடத்தி சென்றுள்ளார். இந்த சம்பவத்தை அறிந்து வந்த தீபிகாவின் மாமனார் பாலாஜி, தன்னுடைய மனைவியும் மருமகளும் வலியால் துடித்ததை பார்த்து உடனடியாக அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
பாலகுமார் மீது புகார் அளித்ததை அடுத்து அவருக்கு இதனை பற்றி தகவலும் தெரியவந்தது. உடனே காரில் கடத்தி சென்ற தீபிகாவை வேப்பம்பட்டில் நடுரோட்டில் இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார். தற்போது போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர் . மேலும் தப்பிச்சென்ற தீபிகாவின் தந்தை பாலகுமாரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.