புதிதாக திருமணமான மகனை பெற்ற தந்தையே கொலை செய்துள்ள சம்பவமானது தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டுக்கு மருமகள் வந்த 25வது நாள்! புது மாப்பிள்ளை மகனை வெட்டி கூறு போட்ட தந்தை! பதற வைக்கும் காரணம்!

தேனி மாவட்டத்திற்கு அருகே பூதிப்புரம் என்ற இடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்குட்பட்ட கோட்டைமேட்டு தெருவில் தங்கராஜ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்தவரான மலைச்சாமியின் வயது 20. அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று மலைச்சாமி வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு சில நாட்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த ஜோதி என்ற 19 வயது பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மலைச்சாமிக்கு குடிப்பழக்கம் இருந்த சம்பவமானது ஜோதிக்கு அறவே பிடிக்கவில்லை. தினமும் குடித்துவிட்டு வந்து ஜோதிடம் தகராறில் ஈடுபடுவதை மலைச்சாமி வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜோதி தன்னுடைய தாயாரின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனிடையே மலைச்சாமியின் செயல்பாடுகளை அவருடைய தந்தையான தங்கராஜ் கண்டித்துள்ளார். நேற்றும் வழக்கம்போல மலைச்சாமி குடித்துவிட்டு வந்து, மேலும் குடிப்பதற்காக தங்கராஜிடம் பணத்தை கேட்டு வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தங்கராஜ் தன்னிடம் இருந்த கத்தியால் மலைச்சாமி உடல் முழுவதும் பல இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார்.
மிகுந்த காயமடைந்த தங்கராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த மலைச்சாமியின் மனைவியான ஜோதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் தங்கராஜ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த சம்பவமானது தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.