25 வயது மருமகளை நள்ளிரவு கதற கதற கற்பழித்த 55 வயது மாமனார்! முத்தலாக் கூறிவிட்டு வேடிக்கை பார்த்த கணவன்!

25 வயதான முஸ்லிம் பெண் ஒருவரை துப்பாக்கி முனையில் தனது மாமனார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியதை அடுத்து பிவாடி போலீசார் கற்பழிப்பு வழக்கை பதிவு செய்துள்ளனர்.


ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் சோபங்கி என்னும் கிராமத்தில் வசித்து வருபவர் 25 வயது ஆன முஸ்லிம் பெண் ஆவார். இந்தப் பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த பெண்ணின் கணவர், கடந்த 22 ஆம் தேதி மூன்று முறை தலாக் சொல்லி அந்தப் பெண்ணை விட்டுப் பிரிந்துவிட்டார்.

பின்னர் முத்தலாக் சொல்லி பிரிந்த அதே நாளில் நள்ளிரவின் போது துப்பாக்கி முனையில் அந்த பெண்ணின் 50 வயது மாமனாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.  தன்னுடைய மருமகள் என்றும் பாராமல் அரக்கத்தனமாக இத்தகைய பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பிவாடி துணை கண்காணிப்பாளர் , கும்வாட், பிவாடி போலீசார் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் மற்றும் முத்தலாக் சட்டத்தின் கீழ் பாலியல் பலாத்கார வழக்கைப் பதிவு செய்துள்ளனர், மேலும் இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.