தந்தை கற்பழித்த பெண்ணை திருமணம் செய்து வாழ்க்கை கொடுத்த மகன்..! அதிர்ச்சியிலும் ஒரு நெகிழ வைக்கும் சம்பவம்!

தன் மகன் காதலித்த பெண்ணை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்ததை அடுத்து இந்த பெண்ணை கைவிடாமல் மகன் தாலிகட்டிய சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 45 வயது மிக்க கருப்பு நித்யானந்தம் என்ற நபர் வசித்து வருகிறார். அவருக்கு திருமணமாகி 20 வயதில் முகேஷ் கண்ணன் என்ற ஒரு மகனும் உள்ளார். இவர் அதே பகுதியில் காய்கறி கடை ஒன்றை நடத்தி வருகிறார். 

முகேஷ் ஐடிஐ படித்தபோது தன்னுடன் படித்த ஒரு பெண்ணை அவர் காதலித்து வந்திருக்கிறார். தன் படிப்பை முடித்துவிட்டு முகேஷ் சென்னையில் பணியாற்றி வந்திருக்கிறார் . முகேஷ் அந்த பெண்ணை காதலிப்பது பற்றிய விவரம் அவரது தந்தை நித்யானந்தத்திற்கு தெரியவந்துள்ளது. 

உடனே நித்தியானந்தம் அவர்கள் இருவரது கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்ததை போல் நடித்துள்ளார். பின்னர் அந்தப் பெண்ணை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார் நித்யானந்தம். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த பெண்ணை அழைத்து தனியாக பேசி இருக்கிறார் . அப்போது என்னுடன் வா உடனடியாக என்னுடைய மகனுக்கு உன்னை திருமணம் செய்து வைக்கிறேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்த வார்த்தையை நம்பி அந்த பெண்ணும் மாமனார் தானே அழைக்கிறார் எனக்கூறி நித்தியானந்தம் உடன் இணைந்து சென்றிருக்கிறார். இருவரும் காரில் ஏறி சென்றுள்ளனர். செம்போடை அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது அந்த பெண்ணை மிரட்டி நித்தியானந்தம் தன் மகன் காதலிக்கும் பெண் என்றும் பாராமல் திருமணம் செய்திருக்கிறார். 

அந்த பெண்ணை ஆள் இல்லாத ஒரு இடத்திற்கு கூட்டிச் சென்று அங்கு பாலியல் பலாத்காரம் செய்து கட்டிப் போட்டிருக்கிறார். இனிமேல் நீ என்னுடன் தான் வாழவேண்டும் எனவும் மிரட்டி இருக்கிறார் . இதனால் அந்த பெண் பெரும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளார்.

உடனே அந்த பெண்ணை கட்டிப்போட்டு நித்யானந்தம் எப்போதும் போல தன் காய்கறி கடையை பார்ப்பதற்காக சென்று இருக்கிறார். மேலும் தன் மகன் முகேஷிடம் அந்தப் பெண் வேறு யாருடனோ ஓடிப்போய் விட்டாள் என்று பொய்யான செய்தியை கூறியிருக்கிறார். பின்னர் அந்தப் பெண் கட்டிப் போட்ட இடத்திலிருந்து மிகவும் சிரமப்பட்டு தப்பித்து வந்திருக்கிறார். 

அந்தப் பெண் அந்த இடத்தை விட்டு தப்பித்து அருகிலிருந்த வேதாரண்யம் காவல் நிலையத்திற்கு சென்று தனக்கு நடந்த அநீதியை கூறியிருக்கிறாள் உடனடியாக போலீசார் அந்த பெண்ணை வீட்டு பின்னர் அந்த பெண்ணின் புகாரை ஏற்றுக் கொண்டனர். தற்போது முகேஷ் கண்ணனின் தந்தை நித்யானந்தம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த செய்தியை அறிந்த முகேஷ் கண்ணன் அந்த பெண்ணை கைவிட்டு விடாமல் அவரை திருமணமும் செய்து கொண்டிருக்கிறார் இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.