மனைவிகளின் தாலியை அறுக்கும் நிலைக்கு வந்துவிட்டோம்! திருவண்ணாமலையை அதிர வைத்த விவசாயிகள் போராட்டம்!

விவசாய கடனை தள்ளுபடி செய்யாததால் மத்திய மாநில அரசுகளை கண்டித்து தாலி ஏந்தியவாறு விவசாயிகள் திருவண்ணாமலையில் போராட்டம் நடத்தியுள்ளனர்.


பல்வேறு மாநிலங்களில் மாநில அரசானது விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்து வருகின்றது. நான் அவள் சென்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாட்டு முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விவசாய கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய இயலாது என்று அறிக்கை விட்டார்.

அப்போதிருந்து விவசாயிகள் பல்வேறு நூதன முறைகளில் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய சங்கத் தலைவரான அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நாட்டின் தலைநகரான டெல்லியிலுள்ள ஜந்தர் மந்தரில் மண்டையோடுகள் வைத்தும், அரை நிர்வாணமாக மாரியும் போராட்டம் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் இன்று காலை நூதன முறையில் போராடினர். விவசாயிகள் தங்கள் கைகளில் பெண்கள் அணியும் தாலி கயிறு களை வைத்துக் கொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு பேரணி நடத்தினர்.

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யாத கோபத்தில் விவசாயிகள் தங்கள் உயிர்களை துச்சமென மதித்து கடுமையாக போராடி வருகின்றனர். இந்த சம்பவமானது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பதற்றத்தை ஏற்படுத்தியது.