கேரட் நறுக்கும் எந்திரத்தில் இருந்து 2 துண்டுகளாக வந்த இளம் பெண்ணின் உடல்..! ஊட்டியை உறைய வைத்த பயங்கரம்!

கேரட் சுத்திகரிப்பு இயந்திரத்தில் சிக்கிக்கொண்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவமானது நீலகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி போன்ற மலைப்பகுதிகளில் அதிகளவில் கேரட் பயிரிடப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் கேரட்கள் தென்னிந்தியா முழுவதிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசு சார்பில் முறையாக செயல்படவேண்டிய கொள்முதல் நிலையங்கள் இல்லாத காரணங்களினால் இடைத்தரகர்களின் இடையூறு அதிகரித்துள்ளது.

இந்த கொரோனா வைரஸினால் அனைத்து பணிகளும் தடைப்பட்டு போனாலும், விவசாயப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சில இடைத்தரகர்களும், முதலாளிகளும் கூலித்தொழிலாளர்களை அதிகளவில் வேலை வாங்குவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் எதுமைக்கண்டி கிராமத்தில், அதிகாலை 3 மணியளவில் கூலித்தொழிலாளர்கள் கேரட்டை அறுவடை செய்வதற்கு எப்பநாடு கிராமத்திற்கு சென்றனர். அறுவடையை முடித்த பின்னர் சுத்திகரிப்பு பணிக்காக பாலாடா என்ற கிராமத்திற்கு சென்றுள்ளனர்.

தொழிலாளர்கள் அனைவரும் அதிகாலை வேளையிலேயே சுத்திகரிப்பு நிலையத்தில் வேலையை தொடங்கி உள்ளனர். அப்போது 18 வயது இளம்பெண் பணியாற்றிக் கொண்டிருந்த போது தவறுதலாக இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார். உடனே சக தொழிலாளர்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்தவுடன் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் எந்தவித நேர கட்டுப்பாடு இல்லாமல் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்து வருவதால் உடல் அயர்ச்சியினால் தவித்து வருவதாக தெரியவந்துள்ளது. இறந்துபோன இளம்பெண்ணுக்கு 18 வயது இருக்கக்கூடும் என்றும், வேலைக்கு சேர்ந்து சில வாரங்களே இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த சம்பவமானது நீலகிரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.