அத்திவரதரை பார்க்கச் சென்ற நடிகை சோனியா அகர்வாலுடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட செல்பி ஆனது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .
அத்திவரதர் சன்னதியில் ஸ்வீட் கடை நடிகை! ஆனந்த அதிர்ச்சியில் பக்தர்கள் செய்த செயல்! விரட்டி அடித்த போலீஸ்!

அத்திவரதர் தரிசனத்திற்காக தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மற்றும் ஆந்திராவில் இருந்தும் பக்தர்கள் காஞ்சிபுரம் வந்த வண்ணம் உள்ளனர் . நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக நிலவியது .இதனால் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க கடும் நெரிசலில் சிக்கினர் .
இந்நிலையில் அத்திவரதரை தரிசிக்க நடிகை சோனியா அகர்வால் வருகை தந்திருந்தார் . இவரைக் கண்டதும் ரசிகர்கள் இவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். ஒரு கட்டத்தை நடிகை என்று தெரிந்து ஏராளமான இளைஞர்கள் சோனியா அகர்வாலை பார்க்க லயன் கட்டினர். சிலர் செல்பி எடுக்க முயன்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர்.
பின்னர் அங்கிருந்து வேகமாக புறப்படுமாறு சோனியா அகர்வாலை போலீசார் கேட்டுக் கொண்டனர். இதனால் அந்த இடத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது . நடிகை சோனியா அகர்வால் 7ஜி ரெயின்போ காலனி , கோவில் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .
அத்திவரதர் கோவிலில் ரசிகர்கள் சோனியா அகர்வாலுடன் எடுத்த செல்பி ஆனது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அண்மையில் தான் காதல் கொண்டேன் எனும் வெற்றிப் படத்தின் 16ம் ஆண்டு வெளியான தினத்தை சோனியா உற்சாகமாக கொண்டாடியிருந்தார். இந்த நிலையில் வேண்டுதலுக்காக சோனியா அத்திவரதரை தரிசித்தாராம்.