மனைவி சயீஷாவின் ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் ஆர்யா!

நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயிஷா ஆகிய இருவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.


இருவரும் கஜினிகாந்த் படப்பிடிப்பில் இருந்தபோது காதலில் விழுந்தனர். அந்த படம் முடிந்து வெளியாகி ஓடவில்லை. ஆனால் அதற்குள் இருவரும் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துவிட்டனர்.

திருமணத்திற்குப் பின்னர் தற்போது ஹனிமூன் சென்றுள்ள இந்த ஜோடி குதூகலமாக உள்ளது. இந்நிலையில் தான் ஹனிமூன் சென்றுள்ள புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் சாயிஷா.

மேலும் என்னுடைய காதலருடன் மூழ்கியிருக்கிறேன் எனவும் தனது பதிவில் பதிவிட்டு இருந்தார் அவர். இதனை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி சோகத்தில் சாயிஷாவை  விமர்சித்து வருகின்றனர். திருமணம் ஆகி ஹனீமூன் போட்டோவை எல்லாமா வெளியிடுவது என்று.