தேடி வந்த மாற்றுத் திறனாளி குழந்தைகள்! அரவணைத்து நெகிழ வைத்த சூர்யா!

சூரரைப்போற்று திரைப்பட தளத்தில் ரசிகர்களுடன் நடிகர் சூர்யா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


சமுதாயத்தின் மீது அதிகளவில் அக்கறை கொண்டவர்களுள் நடிகர் சூர்யாவும் ஒருவர். அவர் நடத்தி வரும் "அகரம்" தொண்டு நிறுவனத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழை குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். தற்போது இவர் அரசியல் சார்ந்த குரல்களையும் கொடுத்து வருகிறார். இதற்காக அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் சமூக வலைதளங்களில் ஏற்பட்டு வருகின்றன.

திரைத்துறையில் சமீபத்தில் அவர் நடித்த காப்பான் திரைப்படம் நன்றாக வெளிவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து "சூரரைப்போற்று" என்ற திரைப்படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். படப்பிடிப்பின் அது அசுர வேகத்தில் நடந்து வருகிறது. இதனிடையே படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் சூர்யாவை காண்பதற்கான குழந்தைகளின் கூட்டம் அலைமோதுகிறது.

அதுபோன்று நிகழ்ந்த ஒரு நாளில் தன்னுடைய ரசிகர்களுக்கு நேரம்  கொடுத்து அவர்களுடன் இணைந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். ரசிகர்கள் சிலர் மாற்றுத்திறனாளிகளாக இருப்பதை கண்டு நடிகர் சூர்யா மனம் நெகிழ்ந்தார். 

ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.