வயது 50..! ஆனால் ஒரே நேரத்தில் 6 பெண்களை திருமணம் செய்த ஆண் தொழில் அதிபர்..! எங்கு தெரியுமா?

ஒரே நாளில் கோடீஸ்வரர் ஒருவர் 6 பெண்களை திருமணம் செய்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தென்ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர் தெம்பு. இவருடைய வயது 50. இவர் அந்நாட்டில் வசித்து வரும் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராவார். இவர் வினோதமான ஒரு செயலை செய்துள்ளார். ஒரு நாளில் சுமார் 6 பெண்களை திருமணம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், "திருமணத்திற்காக நான் பல கோடி ரூபாய் செலவழித்தேன். 8 பேரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தேன். ஆனால் அவர்களுள் 2 தேர் திருமணத்திற்கு தயாராகாததால், 6 பேரை திருமணம் செய்துள்ளேன்.  

வரும் ஜூன் மாதத்தில் மேலும் 2 பெண்களை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளேன். அடுத்தாண்டு தொடக்கத்தில் மீண்டும் 6 பேரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளேன். திருமண ஏற்பாடுகள் குறித்து என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களின் திருப்தி அடைந்ததாக கூறியுள்ளனர்.

மேலும் என்னை கிண்டல் செய்வதற்காக முதலிரவில் எந்த மனைவியுடன் தூங்குவீர்கள் என்று கேள்வி கேட்கின்றனர். அதை நான் முடிவு எடுத்துக்கொள்வேன். என் மனைவிகளை நன்றாக பார்த்து கொள்வேன். அவர்களை எந்நிலையிலும் ஏமாற்ற மாட்டேன். அவர்களுக்கு நிறைய ஆச்சரியங்களை அளிப்பேன்" என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியானது தென்ஆப்பிரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.