கொள்ளை அடிக்க வீட்டின் பூட்டுகளை உடைத்த கை.! இன்று மனைவிக்காக நூல் நூற்கிறது..! வாழ்க்கை துணையை நெகிழ வைத்த கமலக்கண்ணன்!

பல்வேறு திருட்டு வழக்குகளில் சிக்கிக்கொண்டிருந்த பிரபல கொள்ளையன் தற்போது நூல் நூற்று வரும் சம்பவமானது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் பூர்வீகமாக கொண்டவர் கமலக்கண்ணன். இவர் சென்னையிலுள்ள பட்டினப்பாக்கம், பள்ளிக்கரணை, சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். மேலும் இவர் மீது 40 கொள்ளை வழக்குகளும், 5 குண்டர் சட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

6 மாதங்களுக்கு முன்னால் இவருக்கு கலா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அடிக்கடி கமலக்கண்ணன் நீதிமன்றத்திற்கு சென்று வருவதை கண்காணித்த கலா, அதுபற்றி அவரிடம் வினவியுள்ளார்.

உண்மையை மறைக்காமல் கமலக்கண்ணன் தான் ஒரு திருடன் என்று ஒப்பு கொண்டுள்ளார். பிற பெண்களை போன்று திருடனை திருமணம் செய்து கொண்டோம் என்று மனம் வருத்தப்படாத கலா, தன் கணவனை திருந்தி வாழ வைக்க முயற்சித்தார்.

அந்த முயற்சியில் அவர் வெற்றியும் பெற்றார். தற்போது எங்கெல்லாம் கணவர் மீது வழக்குள்ளதோ, அங்கெல்லாம் இருவரும் ஜோடியாக சென்று இனி எந்த குற்ற சம்பவங்களிலும் ஈடுபட மாட்டேன் என்று உறுதி அளித்து வருகிறார்.

இந்த திடீர் மனமாற்றம் குறித்த ஊடகம் ஒன்று அவரிடம் விசாரித்த போது, "என் பெயர் கமலக்கண்ணன். நான் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவன். நான் சிறு வயதில் என்னுடைய சித்தியின் கொடுமைகளை அனுபவித்தேன். அதன் பின்னர் சென்னை கொருக்குப்பேட்டையில் அக்காவின் வளர்ப்பில் வளர்ந்து வந்தேன். முதன் முதலாக கட்டிட வேலைக்கு சென்ற போது கொத்தனாரை அடித்ததற்காக காவல்துறையினர் என்னை அழைத்து சென்றனர். 

அப்போது என் அக்கா என்னை ஜாமீனில் எடுத்தார். சிறையில் இருந்தபோது ஒரு நபருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் செய்த குற்றத்திற்காக மீண்டும் ஒருமுறை காவல்துறையினர் என்னை கைது செய்தனர். ஆனால் இந்த முறை என் அக்கா என்னை ஜாமீனில் எடுக்கவில்லை. சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் என்னுடைய வாழ்க்கை திசை மாறியது. தொடர்ந்து திருட தொடங்கினேன். திருமணம் செய்து வைத்தால் நான் மாறி விடுவேன் என்பதற்காக கலா என்ற பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைத்தார்.

சந்தர்ப்ப சூழ்நிலையால் என் வாழ்க்கை தடம் மாறியது என்பதை உணர்ந்த கலா என்னை திருமணம் செய்வதற்கு சம்மதம் தெரிவித்தார். திருமணத்திற்கு பிறகு என்னுடைய வாழ்க்கையின் மீது எனக்கு பயம் வந்துவிட்டது. நான் செய்த தவறுகளுக்காக யாரேனும் கலாவிடம் அவமரியாதையாக பேசி விடுவார்களோ என்ற அச்சம் நெடுநாளாக நிலவி வந்தது. போக்குவதற்காகவே நான் திருந்தி வாழ முடிவெடுத்தேன்" என்று கூறினார்.

இந்த பேட்டியானது பலருக்கும் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை யாரும் அவமதித்து விடக்கூடாது என்பதற்காக கணவர் திருந்தி வாழ முடிவெடுத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் இதுவரை 40 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். திருமணமான பிறகு தன்னுடைய திருட்டு தொழிலால் மனைவியை யாரேனும் அவமதித்து விடக்கூடாது என்ற எண்ணம் தோன்றியுள்ளது. ஆதலால் தற்போது திருட்டு தொழிலை விட்டு திருந்தி வாழ முடிவெடுத்துள்ளதாக பிரபல ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார்.

இந்நிலையில் தன்னுடைய வழக்குகள் அனைத்தையும் சந்தித்து விட்டு கொருக்குப்பேட்டையில் தன்னுடைய மனைவியுடன் புதிய வாழ்க்கையை வாழ தொடங்கினார். அதுமட்டுமின்றி பல்வேறு வேலைகளை செய்து நன்றாக பணம் சம்பாதித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார். என்னுடைய உலகிலுள்ள பெரும்பாலானோர் ஊரடங்கினால் வேலை இழந்தது போன்று, கமலகண்ணனும் வேலை இழந்தார். அதுமட்டுமின்றி அன்றாட வாழ்க்கைக்கு வருமானம் என்று மிகவும் தவித்து வந்துள்ளார்.

அப்போதுதான் யூடியூப் சேனலில், சின்ன சின்ன நூல்கண்டுகளாக தயாரித்து வருகிறேன். இதன் மூலம் கடந்த 13 நாட்களாக நூல்கண்டுகளை தயாரித்து வருகிறார். இதன்மூலம் அவர்களுக்கு தினந்தோறும் ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை பணம் கிடைப்பதாக கூறப்படுகிறது.

இந்த செய்தியானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவரை போன்று பலரும் திருந்தி வாழ வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.