1 நாளைக்கு 2 மணி நேரம்! 26 கிலோ உடல் எடையை இப்படித்தான் குறைத்தார் சானியா மிர்ஸா!

4 மாதங்களில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 26 கிலோ எடை குறைந்திருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.


இந்தியாவின் புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இவர் பாகிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் 4 மாதங்களுக்கு முன்னர் இத்தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

அனைத்து பெண்களைப் போன்று குழந்தை பிறந்தவுடன் சானியாவின் உடல் எடை அதிகரித்தது. அவர் மிகவும் பருமனாக தொடங்கினார். அவருடைய கர்ப்பகாலத்தின் புகைப்படத்தை பார்த்த பலர் அவர் எவ்வாறு உடலை குறைக்க போகிறார் என்றும், மீண்டும் அவனால் டென்னிஸ் விளையாட முடியுமா என்றும் கிண்டலடித்து இருந்தனர். ஆனால் அப்போதே அவர் 4 மாதங்களில் உடல் எடையை குறைத்து காட்டுவேன் என்று பேட்டி அளித்திருந்தார்.

அவர் கூறியது போலவே வெறும் 4 மாதங்களில் 26 கிலோ உடல் எடை குறைத்துள்ளார். தான் உடல் எடையை குறைப்பதற்காக மேற்கொண்ட சிரமங்களில் அவர் ஒரு சின்ன வீடியோவில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவின் கீழ் அவர் "நான் என்னுடைய உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன்.

4 மாதங்களில் 26 கிலோ குறைத்துள்ளேன். தினமும் 1 அல்லது 2 மணி நேரத்தை உங்களுக்காக செலவழியுங்கள். முழு மனதையும் ஈடுபடுத்தி உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். என்னால் முடிந்தது என்றால் அனைத்து பெண்களாலும் மிகவும் எளிதாக இதனை செய்ய முடியும். முழு மனதுடன் ஈடுபட்டால் உடல் எடை குறையும் அனுபவத்தை உணர்வீர்கள்" என்று பதிவிட்டுருந்தார்.

இந்த வீடியோவானது அனைத்து பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.