பிரபல சாமியார் திடீர் மரணம்..! கொரோனா ஊரடங்கையும் மீறி அஞ்சலி செலுத்த திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்..! எங்கு தெரியுமா?

பிரபல ஆன்மீக தலைவரான தேவ் பிரபாகர் சாஸ்திரியின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டது மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மத்தியப்பிரதேச மாநிலத்தில் மிகப்பெரிய ஆன்மீக தலைவராக திகழ்ந்தவர் தேவ் பிரபாகர் சாஸ்திரி. இவருடைய வயது 82. இவர் அம்மாநில மக்களால் அன்போடு "தாதாஜி" என்று அழைக்கப்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே இவர் கடுமையான நுரையீரல் மற்றும் சிறுநீரக கோளாறால் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சென்ற வாரம் அவருடைய நிலைமை மோசம் அடைந்ததை தொடர்ந்து முன்னாள் மாநில அமைச்சர் சஞ்சய் பதக் டெல்லியிலிருந்து தாதாஜியை மத்திய பிரதேசத்திற்கு அழைத்து வந்தனர். இந்நிலையில் துரதிஷ்டவசமாக நேற்று முன்தினம் தாதாஜி இயற்கை எய்தினார். இவருடைய இறுதி சடங்கானது நேற்று மாலை நேரத்தில் கத்னி என்ற பகுதியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இறுதி சடங்கு நிகழ்வுகளில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். ஆனால் நூற்றுக்கணக்கான மக்கள் தாதாஜியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டது, சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்களும் திரைத்துறையினரும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

இறுதி ஊர்வலம் குறித்து அந்த மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "மக்கள் அதிகமாக கூடியது துரதிஷ்டவசமாக இருந்தாலும், சமூக இடைவேளை, முக கவசம் அணிந்து இருந்தல் ஆகிய சுகாதார நடைமுறைகள் அனைத்தும் கடைபிடிக்கப்பட்டு இருந்தன" என்று கூறினார்.

தாதாஜியின் மறைவுக்கு, அம்மாநில முதல்வரான சிவராஜ் சிங் சவுகான், முன்னாள் முதலமைச்சரும், மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் மற்றும் முன்னாள் முதலமைச்சரான திக்விஜய்சிங் ஆகியோரும் புகழ் கலந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். 

தாதாஜியின் மறைவானது மத்தியப்பிரதேச மாநிலத்தில் பேரிழப்பாக கருதப்படுகிறது.